அதிகளவு பொருள் கொள்வனவு செய்து சுமந்து வர மட்டும் அல்ல ,தொலை தூர பயணங்களின்போது பொருட்களை கொண்டு செல்வதற்கு ட்ரவலிங் பேக் அல்லது சூட்கேஸ் பயன்படுத்தப்படும். எனினும் இவற்றினை தூக்கிச் செல்வது மிகவும் சிரமமான காரியமாக இருக்கும். இப் பிரச்சினைக்கு தீர்வாக Piaggio Group நிறுவனம் புதிய ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது. Gita எனும் இந்த ரோபோ தானாகவே நகர்ந்து செல்லக்கூடிய வகையிலும், ஒருவரைப் பின்தொடர்ந்து செல்லக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Read More »குமரன்
அதிர்ச்சியில் அவுஸ்ரேலிய பிரதமர்!
அவுஸ்ரேலிய பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இணைப்பை பாதியிலேயே துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 45 வது அதிபராக டொனல்ட் டிரம்ப் அண்மையில் பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து உலக நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் டிரம்ப். அந்த வகையில் அவுஸ்ரேலிய பிரதமர், மால்கம் டர்ன்புல்லிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவுஸ்ரேலியாவிடம் தஞ்சம் புகுந்த சிரியா உட்பட மேற்காசிய நாட்டு அகதிகளில் 1,250 பேரை அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருந்தது பற்றி பேசியதாக தெரிகிறது. மேலும் அகதிகளை ...
Read More »அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து
அவுஸ்ரேலியாவிலுள்ள இலங்கையர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவுஸ்திரேலியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தின் தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது. அந்தக்கட்சியின் பிராந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பில் சோர்டன், இலங்கையின 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 1948ம் ஆண்டு வரலாற்று வெற்றியை பெற்ற இலங்கை, உலக நாடுகளுக்கு மத்தியில் தனது நாட்டு தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதத்தை பாடியது. அவுஸ்ரேலியா மற்றும் இலங்கைக்கு இடையில் முறையான ராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் 70 ...
Read More »அவுஸ்ரேலிய நிதிப்பங்களிப்பு மூலம் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தாரகைப்படகு பயணத்தை தொடங்கியது
நெடுந்தாரகைக்கு புதிய கப்டன் நியமிக்கப்பட்டதனையடுத்து நேற்று முன்தினம்(2) முதல் அதன் சேவையை ஆரம்பித்துள்ளதாக வட மாகாண பிரதம செயலாளர் அலுவல அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பில் குறித்த அதிகாரி மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவு மக்களின் பயண பயன்பாட்டிற்காக நெல்சிப் திட்டம் மற்றும் அவுஸ்ரேலிய நிதிப்பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தாரகைப்படகானது கடந்த மாதம் 20ஆம் நாள் தனது முதல் உத்தியோகபூர்வ சேவையை ஆரம்பித்தபோதும் அதற்கான நிரந்தர அனுபவம் வாய்ந்த ஒரு கப்டன் தர அதிகாரி இன்மையால் அனுபவம் அற்ற புதிய பணியாளர்களை மட்டும் ...
Read More »திமுக தலைவரின் பெயரை பட தலைப்பாக வைக்கும் விஜய்!
விஜய் அன்ரனி தனது படத்தின் அடுத்த படத்துக்கு திமுக தலைவர் ஒருவரின் பெயரை தலைப்பாக வைத்துள்ளார். விஜய் அன்ரனி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் தலைப்பை வித்தியாசமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். யாரும் தேர்ந்தெடுக்க தயங்கும் தலைப்புகளை தன்னுடைய படத்துக்கு தலைப்பாக வைத்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார். அந்த வரிசையில் ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ ஆகிய படங்கள் விஜய் அன்ரனிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. இந்நிலையில், அடுத்ததாக இவர் நடித்துள்ள ‘எமன்’ படமும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் அன்ரனி அரசியல்வாதியாக நடிக்கிறார். ...
Read More »வேவ் ஒன் இன் ஏர்
மோட்டோரோலா நிறுவனம் வேவ் ஒன் இன் ஏர் வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகப்படுத்துகிறது. இசைக் கேட்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெட்போனை மழையில் கூட பயன்படுத்த முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் பயன்படுத்தலாம். விலை 149.99 யூரோ. மோட்டோரோலா நேரடியாக விற்பனை செய்கிறது. இது அப்பிள் ஏர்பாடைவிட மிக குறைந்த விலை என்பதால் இசை பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
Read More »பாராளுமன்ற நாயகர்கள் அல்ல பங்களா நாயகர்கள்!
ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்னதாகத் தமிழ் அரசியல் தலைவர்கள் சொத்து சேர்ப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த போதும் போராட்டத்தின் பங்காளர்களான மக்கள் வறுமையில் வாடுவது சொல்லித் தெரியவேண்டியதொன்றல்ல. அண்மைக்காலமாகத் தமிழரசுக்கட்சித் தலைவர்களது சொத்து சேர்ப்பு வேகம் சாதாரண மக்களிடையே அச்சத்துடன் பார்க்கப்படுகின்றது. அண்மையில் விடுவிக்கப்பட்ட மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசா சுமார் மூன்றரை கோடி மதிப்பிலான பங்களா கட்டுமானத்தை வேகமாக மேற்கொண்டுவருகின்றார். ஏற்கனவே தமிழகம் மற்றும் கேரளாவிலுள்ள பங்களாக்களிற்கு மேலாக தற்போது மாவிட்டபுரத்தில் தனது கனவு இல்லத்தினை மாவை வேக வேகமாக கட்டிவருகின்றார். இது பற்றி மற்றொரு ...
Read More »டைகர்ஏர் அவுஸ்ரேலியா இனி பாலி செல்லாது
இந்தோனேசியாவின் பாலி தீவுக்கான தனது சேவைகள் அனைத்தையும் நிரந்தரமாக ரத்து செய்யும் என்று டைகர்ஏர் அவுஸ்ரேலியா கூறியுள்ளது. Virgin Australia Holdings குழுமத்தைச் சேர்ந்தது டைகர்ஏர் அவுஸ்ரேலியா. வர்த்தக விமானத் துறைக்கான விதிமுறைகளை Virgin Australia Holdings நிறைவேற்றவில்லை எனக் கூறி இந்தோனேசியா அதற்கான அனுமதியை ரத்து செய்தது. தனது அனைத்துலக வர்த்தகத்தின் லாபத்தைப் பாதுகாக்க அந்நிறுவனம், தனது சேவைகளை டைகர்ஏர் அவுஸ்ரேலியாவுக்கு மாற்றிக்கொண்டது. டைகர்ஏர் அவுஸ்ரேலியா, பாலிக்கான தனது விமானச் சேவைகளை இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான இறுதிகட்ட அனுமதி ...
Read More »நிராசையுடன் உயிர் நீத்த 103 வயது பாட்டி!
அமெரிக்காவின் அதிபராகத் திருமதி ஹிலரி கிளிண்டனை எப்படியேனும் பார்க்கவேண்டும் என்ற ஆசையுடன் கடந்தாண்டு முழுவதும் முழுவீச்சில் செயல்பட்டுள்ளார் நூறு வயதுக்கும் மேலான மூதாட்டி. 1913ஆம் ஆண்டில், முதலாம் உலகப் போருக்கு முன் பிறந்தவர் ருலின் ஸ்டைனிங்கர். தேர்தல்களில் பெண்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லாத காலம் அது. கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில், முதல் பெண் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஜனநாயகக் கட்சியினருடன் ஸ்டைனிங்கர் மும்முரமாகப் பணியாற்றினர். அதற்கான பணிகளை முடிக்காமல் தமது உயிர் பிரியாது என்று அப்போது ஸ்டைனிங்கர் திண்ணமாகக் கூறினார். கடந்த நவம்பரில் டிரம்ப்பின் வெற்றி ...
Read More »வடக்கு முதல்வருக்கு இந்திய மத்திய அரசினால் அச்சுறுத்தல்!
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய மத்திய அரசினால் பல்வேறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாண சபை பிரித்தானியாவின் தெற்கு லண்டனில், கிங்ஸ்டன் நகர சபையுடன் (Kingston Borough Council) கடந்த வருட இறுதிப் பகுதியில் இணைந்திருந்தது. இது தொடர்பிலேயே இந்திய அரசாங்கத்தினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு இணைவதற்கு முன்னர் இந்தியாவின் முழுமையான அனுமதியை பெற்றுக் கொள்ளாமை தொடர்பில் முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள நாட்டின் நகர சபையுடன் ...
Read More »