டைகர்ஏர் அவுஸ்ரேலியா இனி பாலி செல்லாது

இந்தோனேசியாவின் பாலி தீவுக்கான தனது சேவைகள் அனைத்தையும் நிரந்தரமாக ரத்து செய்யும் என்று டைகர்ஏர் அவுஸ்ரேலியா கூறியுள்ளது.


Virgin Australia Holdings குழுமத்தைச் சேர்ந்தது டைகர்ஏர் அவுஸ்ரேலியா. வர்த்தக விமானத் துறைக்கான விதிமுறைகளை Virgin Australia Holdings நிறைவேற்றவில்லை எனக் கூறி இந்தோனேசியா அதற்கான அனுமதியை ரத்து செய்தது. தனது அனைத்துலக வர்த்தகத்தின் லாபத்தைப் பாதுகாக்க அந்நிறுவனம், தனது சேவைகளை டைகர்ஏர் அவுஸ்ரேலியாவுக்கு மாற்றிக்கொண்டது.

டைகர்ஏர் அவுஸ்ரேலியா, பாலிக்கான தனது விமானச் சேவைகளை இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான இறுதிகட்ட அனுமதி இன்னமும் இந்தோனேசியாவிடமிருந்து கிடைக்கவில்லை என்று அது கூறியது.

பாலிக்குச் செல்லும் டைகர்ஏர் விமானச் சேவைக்கான சீட்டுகளை வாங்கியவர்கள், தங்களது பணத்தை முழுமையாக திரும்பப் பெறலாம் என்றது விமான நிறுவனம்.