அமெரிக்காவின் அதிபராகத் திருமதி ஹிலரி கிளிண்டனை எப்படியேனும் பார்க்கவேண்டும் என்ற ஆசையுடன் கடந்தாண்டு முழுவதும் முழுவீச்சில் செயல்பட்டுள்ளார் நூறு வயதுக்கும் மேலான மூதாட்டி.
1913ஆம் ஆண்டில், முதலாம் உலகப் போருக்கு முன் பிறந்தவர் ருலின் ஸ்டைனிங்கர். தேர்தல்களில் பெண்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லாத காலம் அது.
கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில், முதல் பெண் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஜனநாயகக் கட்சியினருடன் ஸ்டைனிங்கர் மும்முரமாகப் பணியாற்றினர். அதற்கான பணிகளை முடிக்காமல் தமது உயிர் பிரியாது என்று அப்போது ஸ்டைனிங்கர் திண்ணமாகக் கூறினார்.
கடந்த நவம்பரில் டிரம்ப்பின் வெற்றி அறிவிக்கப்பட்டபோது மனமுடைந்துபோனதாகத் ஸ்டைனிங்கர் கூறினார். ஆயினும், தாம் மறைந்தாலும் தமது ஆன்மா என்னென்றும் பெண்களின் உரிமைக்காகப் போராடும் என அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டார்.
Eelamurasu Australia Online News Portal