குமரன்

மருத்துவ வரலாற்றில் புதிய சம்பவம்

பெண் ஒருவரின் கருப்பையின் திசுவை 13 வருடங்களாக உறைய வைத்து பின்னர் அதனை உரித்துடைய பெண்ணுக்கு பொறுத்தி குழந்தை ஒன்றை பெற்றெடுத்த வரலாற்றுச் சம்பவம் லண்டனில் போரட்லான்ட் வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. உலகில் முதல் முறையாக 13 வருடங்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கர்ப்பை  திசுவையை மீண்டும் உரித்த பெண்ணிற்கே பயன்படுத்தி குழந்தை பெறப்பட்டுள்ளது. இச் சம்பவம் மருத்துவ துறையில் புதிய சாதனையாக பதிவாகியுள்ளது. டுபாயில் பிறந்த மோசா அல் மன்ரூசி என்பவருக்கு அவரின் 11ஆவது வயதில் உடலில் ஏற்பட்ட இரத்த சம்பந்தமான பிரச்சினையால் கருப்பை திசுவை ...

Read More »

புயலால் சாய்ந்த மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க முதல்வரிடம் கோரிக்கை

புயலால் சாய்ந்த மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க முதல்வரிடம் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விவேக் கிரீன் கலாம் என்ற பெயரில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நட்டு வருகிறார். இவருடைய இலக்கு 1 கோடி மரங்களை தமிழகத்தில் நடவேண்டும் என்பதுதான். அந்த இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் சமீபத்தில் சென்னையை தாக்கிய வர்தா புயல் ஏகப்பட்ட மரங்களை வேரோடு சாய்த்துள்ளது. பசுமையை இழந்து தவிக்கும் சென்னையை மீண்டும் பசுமையாக்குவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், விவேக் இன்று இதுதொடர்பாக சென்னை ...

Read More »

அமேசான் நிறுவனம் ஆளில்லா விமானம் மூலம் முதன்முறையாக பொருள் வழங்கல்

அமேசான் நிறுவனம் ஆளில்லா விமானம் மூலம் முதன்முறையாக பொருள் ஒன்றை டோர் டெலிவரி செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் நிறுவனம் திகழ்கிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஆளில்லா விமானம் மூலமாக பொருள் ஒன்றை தனது வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்துள்ளது. கடந்த டிசம்பர் 7-ம் திகதி ஆளில்லா விமானம் மூலம் டோர் டெலிவரி செய்த அமேசான் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அதனை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்த காணொளி ஒன்றையும் அமேசான் வெளியிட்டுள்ளது. அமேசான் இணையதளத்தில் பொருளை ஆர்டர் செய்த ...

Read More »

2016 கூகுள் தேடலில் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம்

2016-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம் பெற்றுள்ளார். பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்னும் ஹாலிவுட் சீரியலின் மூலம் உலகளவில் புகழ் பெற்றார். தொடர்ந்து ஆஸ்கர் விருது விழாவில் விருது வழங்கும் நபர்களில் ஒருவராக பிரியங்கா சோப்ரா இடம் பெற்றது உலகளாவிய அவரது புகழை மேலும் அதிகப்படுத்தியது. ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் ஜோடியாக பிரியங்கா நடித்திருக்கும் ‘பே வாட்ச்’ திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளது. இதுதவிர ஐக்கிய ...

Read More »

சாயத்திலிருந்து சூரிய மின்சாரம்!

சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இப்போது பல புதிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மிக மலிவானது, வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளது; ‘பெரோவ்ஸ்கைட்’ என்ற பொருள் தான் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அண்மையில் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள், பெரோவ்ஸ்கைட்டை பயன்படுத்தி உருவாக்கிய சூரிய ஒளி மின் அமைப்பு, மின் தயாரிப்பில் சாதனை படைத்துள்ளது. கால்சியம் டைட்டானேட் என்ற பொருளை அதிகம் கொண்ட மஞ்சள், பழுப்பு மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கும் தாதுவைத்தான், பெரோவ்ஸ்கைட் என்கின்றனர் விஞ்ஞானிகள். நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ...

Read More »

வடகிழக்கு ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தெற்குக்கும் பரவியுள்ளது.

வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை தற்போது தெற்கு ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது என யாழ்.ஊடக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் கடற்படை தளபதியினால் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வைத்து ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்.ஊடக அமையம் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது. குறித்த அறிக்கையிலையே அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது ,வடகிழக்கு  தமிழர் தாயகத்தினில் ஊடகவியலாளர்கள் மீது யுத்த காலத்திலும் அதன் பின்னருமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இலங்கை பாதுகாப்பு படைகளது வன்முறை தற்போது தென்னிலங்கைக்கும் ...

Read More »

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் தொடக்கம்

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்மேனில் தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியாவுக்கு சென்று உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று (15)  பிரிஸ்மேனில் தொடங்குகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் கட்டாயத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் ...

Read More »

நீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கின்றோம்

எம் மக்களின் பல்வேறு இடப்பெயர்வுகள், மீள்குடியேற்றம் போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டே நீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 69ஆவது அமர்வு இன்று(14) காலை 9.30 மணியளவில் மாகாண பேரவைச் சபா மண்டபத்தில் இடம்பெற்றதுடன் 2017ஆம் ஆண்டுக்கான நான்காவது வரவு செலவுத்திட்டத்தினை இந்த சபைமுன் சமர்ப்பிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், வட மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலை, கலாச்சார விழுமியங்களை ...

Read More »

உலகப்பட விழாவில் தேசிய கீதத்துக்கு அவமதிப்பு

கேரள மாநிலத்தில் நடைபெற்றுவரும் உலகப்பட விழாவில் திரைப்படம் போடுவதற்கு முன்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது எழுந்துநின்று மரியாதை செலுத்த மறுத்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். உச்ச நீதிமன்ற  உத்தரவுப்படி நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில் திரைப்படம் போடுவதற்கு முன்னால் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. கன்னாகக்குன்னு நிஷாகாந்தி திறந்தவெளி திரையரங்கத்தில் நேற்று தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அங்கிருந்த ...

Read More »

அவுஸ்ரேலிய மண்ணில் பாகிஸ்தான் வெல்வது எளிதான காரியம் அல்ல

அவுஸ்ரேலிய மண்ணில் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை வெல்வது எளிதான காரியம் அல்ல என்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா  சென்றுள்ளது. முதல் போட்டி பிரிஸ்பேனில் 15-ந்தேதி (இந்திய நேரப்படி நாளைமறுநாள்) தொடங்குகிறது. பிரிஸ்பேனில் இந்த போட்டி பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக பிங்க் பந்தில் நடக்கிறது. இந்நிலையிலி, பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாமண்ணில் எளிதில் வென்று விட முடியாது என்று இந்த தொடர் குறித்து ...

Read More »