அவுஸ்ரேலிய மண்ணில் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை வெல்வது எளிதான காரியம் அல்ல என்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றுள்ளது. முதல் போட்டி பிரிஸ்பேனில் 15-ந்தேதி (இந்திய நேரப்படி நாளைமறுநாள்) தொடங்குகிறது. பிரிஸ்பேனில் இந்த போட்டி பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக பிங்க் பந்தில் நடக்கிறது.
இந்நிலையிலி, பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாமண்ணில் எளிதில் வென்று விட முடியாது என்று இந்த தொடர் குறித்து அவுஸ்ரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் கூறியுள்ளார்.
மேலும், அவர் இந்த தொடர் குறித்து பேசுகையில் ‘‘நாங்கள் முன்னதாக இலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக தொடரை இழந்தோம். தற்போது அந்த துயரத்தில் இருந்து மீள பாகிஸ்தான் தொடர் ஒரு வாய்ப்பாக இருக்கும். பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியா மண்ணில் 11 தொடர்களில் விளையாடியுள்ளது. இதில் ஒன்றைக்கூட வென்றதில்லை. கடைசி மூன்று தொடரை பாகிஸ்தான் 0-3 என இழந்துள்ளது. 1999-ல் இருந்து 9 டெஸ்டுகளை தோற்றுள்ளது.
ஸ்மித் தலைமையிலான புதிய அணி ஐந்து டெஸ்டுகளை தோற்றபின் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 1988-ம் ஆண்டிற்குப் பிறகு பிரிஸ்பேனில் அவுஸ்ரேலியா 27 டெஸ்டில் விளையாடியுள்ளது. இதில் ஒரு டெஸ்டில் கூட அவுஸ்ரேலியா தோற்றது கிடையாது. அந்த உறுதியுடன் செல்கிறோம்.
நியூசிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி மிகவும் தடுமாறியது. சொந்த நாட்டை விட்டு வெளியில் விளையாடும்போது அந்த அணி சற்று தடுமாறத்தான் செய்கிறது’’ என்றார்.