பெண் ஒருவரின் கருப்பையின் திசுவை 13 வருடங்களாக உறைய வைத்து பின்னர் அதனை உரித்துடைய பெண்ணுக்கு பொறுத்தி குழந்தை ஒன்றை பெற்றெடுத்த வரலாற்றுச் சம்பவம் லண்டனில் போரட்லான்ட் வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
உலகில் முதல் முறையாக 13 வருடங்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கர்ப்பை திசுவையை மீண்டும் உரித்த பெண்ணிற்கே பயன்படுத்தி குழந்தை பெறப்பட்டுள்ளது. இச் சம்பவம் மருத்துவ துறையில் புதிய சாதனையாக பதிவாகியுள்ளது.
டுபாயில் பிறந்த மோசா அல் மன்ரூசி என்பவருக்கு அவரின் 11ஆவது வயதில் உடலில் ஏற்பட்ட இரத்த சம்பந்தமான பிரச்சினையால் கருப்பை திசுவை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பெண்ணின் கருப்பை திசு 13 வருடங்களாக பாதுகாப்பான முறையில் உறையவைத்திருந்த வைத்தியர்கள் அவரின் 23 ஆவது வயதில் திசுவை மீண்டும் குறித்தப் பெண்ணிற்கே பொறுத்தவே அவர் 24வது வயதில் குழந்தையை பெற்றுள்ளார்.
இது மருத்துவ துறையில் புதுவித புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என லண்டன் போர்ட்லேண்ட் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
குழந்தைக்கு ராசீட் என பெயர் வைத்துள்ளதாகவும் இவ்வாறானதொரு குழந்தையை நீண்ட நாட்கள் காத்திருந்து பெற்றமை மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் மோசா மற்றும் அவரின் கணவர் அஹமட் ஆகியோர் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal