Tag Archives: ஆசிரியர்தெரிவு

லஹிரு எவ்வாறு உயிரிழந்தார்? – சஷி வீரவன்ச சாட்சியம்

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. கடுவெல நீதிமன்றில் மேலதிக மாவட்ட நீதிபதி பிரசாத் அல்விஸ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது அங்கு மரண விசாரணையின் ஆரம்ப சாட்சி சஷி வீரவன்ச சாட்சியம் வழங்கினார். அவர் நீதிமன்றில் குறிப்பிட்டதாவது, “உயிரிழந்த லஹிரு எனது மகனின் நல்ல நண்பர். சில காலங்களாக அவர்கள் இருவரும் நெருங்கி பழகினார்கள். பல நாட்கள் மகனுடன் இரவில் எங்கள் வீட்டில் தங்குவார்கள். அதேபோன்று சம்பவம் இடம்பெற்ற ...

Read More »

சிறீலங்கா பொலிஸ் சேவைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 400 முறைப்பாடுகள்!

சிறீலங்கா பொலிஸ் சேவைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலானவை, சித்திரவதை மற்றும் ஏனைய சட்ட விரோத நடவடிக்கைகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர, இரகசியப் பொலிஸாருக்கு எதிராகவும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இரகசியப் பொலிஸார் சித்திரவதை முகாம் போன்று செயற்படுவதாகவும் அம்முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நான்காவது மாடி என அறிமுகமாகியுள்ள இரகசியப் பொலிஸ் பிரிவில், சித்திரவதை வழங்கப்படுவதாகவும், அதற்கான சாட்சிகள் பல உள்ளதாகவும் ...

Read More »

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் இணக்கம்

சிறீலங்காவில் பங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. புதிதாக கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவு ஆவணம் கடந்த செப்ரெம்பரில் சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வரைவு ஆவணம், வெளியே கசிந்துள்ள நிலையில் அதற்கு பல தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இந்த நிலையிலேயே, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மூல வரைபில் திருத்தங்களைச் செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த திருத்தங்கள் தொடர்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த ...

Read More »

சம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்

அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றுள்ளார். அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், உதவித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் மற்றும் தூதரக அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில், சிறிலங்காவின் அனைத்தும் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான நல்லிணக்கம் மற்றும் அமைதி தொடர்பான தனது பார்வையை, இரா.சம்பந்தன் பகிர்ந்து கொண்டார் என்று, அமெரிக்கத் தூதுவர் அதுல் ...

Read More »

‘புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது, துரிதமாக இடம்பெறவேண்டும்’

“புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது, துரிதமாக இடம்பெறவேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலமாக, 70 வருடகாலமாகப் புரையோடியிருக்கின்ற தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படவேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக இருக்கிறது“ என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், நேற்று (08) தெரிவித்தார். புதிய அரசியலமைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிகளுடன் ஆராயும் முழுநாள் கூட்டம், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டம், நேற்று மாலை நிறைவடைந்ததன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் ...

Read More »

மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாற்றுச்சின்னங்கள் அழிந்து போகும்நிலையில்

ஒல்லாந்தரினால் முல்லைத்தீவினை ஆட்சி செய்யப்பட்ட காலத்தில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஏற்பட்ட நேரடி மோதலின் போது 1803 ஆம் ஆண்டு பண்டாரவன்னியன் முல்லைத்தீவு நகரத்தையும் ஒல்லாந்தர் கோட்டையையும் கைப்பற்றி தனது இராட்சியத்தினை முல்லை மாவட்டத்தில் ஒல்லாந்தர் கோட்டையை தனது கோட்டையாக ஆட்சி செய்து வந்துள்ளார். விடுதலைப்புலிகளின் காலத்தில் அக்கோட்டையானது அதிக பாதுகாப்புகளை வழங்கி பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அபிவிருத்தி என்ற பேரில் அக்கோட்டையினை பேரினவாதிகள் அழித்தொழிக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் வீரம் பேசும் தமிழ் அரசியல்வாதிகளினாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினாலும் அதனை பாதுகாப்பதற்கு முடியவில்லை. ...

Read More »

நாவற்குழி சிங்களவரிற்கும் பொருத்துவீடுகள்?

யாழ்.நகரின் நுழைவாயிலான நாவற்குழியில் திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றவாசிகளிற்கும் மீள்குடியேற்ற அமைச்சின் வீடுகள் கிட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 340 வரையிலான சிங்கள குடியேற்றவாசிகள் மஹிந்த ஆட்சி காலத்தில் வாகனங்களில் ஏற்றிவரப்பட்டு வீடமைப்பு அதிகாரசபையின் அனுசரணையுடன் நாவற்குழியில் குடியமர்த்தப்பட்டனர். பின்னராக சிங்கள மதவாத அமைப்புக்களினால் படிப்படியாக நிரந்தர கல்வீடுகள் அமைத்து வழங்கப்பட்டதுடன் பாரிய விகாரையும் அமைத்து குடியேற்றதிட்டம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விசேட அதிரடிப்படை மற்றும் படையினர் உடைய இரு முகாம்கள் அப்பகுதியினுள் அமைக்கப்பட்டு 24 மணிநேர பாதுகாப்பும் வழங்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் நிரந்தர வீடுகள் கிட்டியிராத ...

Read More »

சரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட நீதிமன்றம் உத்தரவு

இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக  செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் பட்டியலை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னதாகக் கையளிக்க வேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் காணாமல் போயுள்ளதாக பதியப்பட்ட வழக்கொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

கனடாவிற்குச் செல்லவேண்டாம்! – வடக்கு முதலமைச்சருக்கு சம்பந்தன் கடிதம்!

வடக்கு மாகாண முதலமைச்சரை சில தவறான வழிநடத்தல் காரர்களே கனடா நாட்டிற்கு அழைப்பதாகவும் அவரை அங்கு செல்லவேண்டாமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கனடா நாட்டின் மார்க்கம் நகரில் நிகழ்வுகளை நடாத்துபவர்களின் அழைப்பின் பேரில் எதிர்வரும் நான்காம் நாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவிற்குச் செல்லவுள்ள நிலையில், அந்நிகழ்வுகளை நடாத்துபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் எனவும் அவரை அங்கு செல்லவேண்டாம் எனவும் கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், மார்க்கம் நகரில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு தமிழரசுக் ...

Read More »

முன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியைச் சேர்ந்த இனியவன் என அழைக்கப்படும் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் உறுப்பினராக செயற்படும் இவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த குறித்த நபரின் சடலத்தை நீதிபதி பார்வையிட்டதையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »