ஒல்லாந்தரினால் முல்லைத்தீவினை ஆட்சி செய்யப்பட்ட காலத்தில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஏற்பட்ட நேரடி மோதலின் போது 1803 ஆம் ஆண்டு பண்டாரவன்னியன் முல்லைத்தீவு நகரத்தையும் ஒல்லாந்தர் கோட்டையையும் கைப்பற்றி தனது இராட்சியத்தினை முல்லை மாவட்டத்தில் ஒல்லாந்தர் கோட்டையை தனது கோட்டையாக ஆட்சி செய்து வந்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் காலத்தில் அக்கோட்டையானது அதிக பாதுகாப்புகளை வழங்கி பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அபிவிருத்தி என்ற பேரில் அக்கோட்டையினை பேரினவாதிகள் அழித்தொழிக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் வீரம் பேசும் தமிழ் அரசியல்வாதிகளினாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினாலும் அதனை பாதுகாப்பதற்கு முடியவில்லை.
இந்தக் கோட்டை இடிக்கப்பட்டு அபிவிருத்தி என்ற போர்வையில் முல்லை மாவட்ட செயலகவளாகத்தில் ஒரு மூலைப்பகுதியில் 10 அடி நீளமுடைய ஒரு துண்டு மட்டுமே இதன் வராலாற்றுச்சின்னமாக காணப்படுகின்றது.
இதனை இளம் சந்ததியினர்களுக்கு இந்த சுவர் துண்டினை பாதுகாத்து இளையதலைமுறைகளுக்கு பண்டாரவன்னியனின் வரலாற்றினை பேணி பாதுகாக்குமாறு அரசியல்வாதிகளிடம் புத்திஜீவீகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal
