யாழ்ப்பாணம் – சாவகச்சேரியைச் சேர்ந்த இனியவன் என அழைக்கப்படும் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் உறுப்பினராக செயற்படும் இவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த குறித்த நபரின் சடலத்தை நீதிபதி பார்வையிட்டதையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal

