சிறீலங்கா பொலிஸ் சேவைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலானவை, சித்திரவதை மற்றும் ஏனைய சட்ட விரோத நடவடிக்கைகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர, இரகசியப் பொலிஸாருக்கு எதிராகவும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இரகசியப் பொலிஸார் சித்திரவதை முகாம் போன்று செயற்படுவதாகவும் அம்முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நான்காவது மாடி என அறிமுகமாகியுள்ள இரகசியப் பொலிஸ் பிரிவில், சித்திரவதை வழங்கப்படுவதாகவும், அதற்கான சாட்சிகள் பல உள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.