யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவுக்கான தேர்தல் நாளைத் தீர்மானிப்பதற்கும், துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதி, தராதரங்களை ஆராய்வதற்கான மதிப்பீட்டுக் குழுவை அமைப்பதற்காகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி கடந்த ஒக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில் இரண்டு புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் உட்பட ஒன்பது பேர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர். கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் துணைவேந்தர் தெரிவுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், முன்னாள் துணைவேந்தரும், தற்போதைய விண்ணப்பதாரிகளில் ஒருவருமான பேராசிரியர் இ. ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
பிரித்தானிய தூதுவருடன் சுமந்திரன் சந்தித்து பேச்சு!
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தமிழர் தரப்பு அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சரா ஹூல்ரன் கேட்டறிந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனை பிரித்தானியத் தூதுவர் சந்தித்து பேசினார். தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தேர்தலின் பின்னரான அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பிலும் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்தும் சுமந்திரன் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்துள்ளார்.
Read More »ஆஸ்திரேலியாவில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த மலைப்பாம்பு!
ஆஸ்திரேலியாவில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்தது.ஆஸ்திரேலியாவில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லிஸ்மோர் நகரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. கடந்த புதன்கிழமை இளம்பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். ஏ.டி.எம். மையத்தின் உள்ளே நுழைந்த அவர் ஒரு நிமிடம் ...
Read More »ரோயல் பார்க் கொலை குற்றவாளி ; வெளிநாடு செல்ல பயணத் தடை!
ரோயல் பார்க் கொலை ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமைக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கடந்த 13 ஆம் திகதி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந் நிலையில் குறித்த மனுவானது இன்றைய தினம் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் ...
Read More »ஊடகவியலாளர் துஷாரா விசாரணையின் பின் விடுவிப்பு!
வொய்ஸ் ரியூப் எனப்படும் யூ ரியூப் அலைவரிசையின், செம்மைப்படுத்துனரான துஷாரா விதானகே சி.ஐ.டி. விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 8.30 மணிக்கு சி.ஐ.டி.யின் கணனிக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவில் ஆஜரான அவரிடம் அங்கு பல மணி நேரம் சிறப்பு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். துஷாரா விதானகேவுக்கு எதிராக சிங்கள அமைப்பொன்று செய்த முறைப்பாட்டை மையப்படுத்தி இந்த விசாரணைகள் இடம்பெற்றதாகவும் அவர் அவரது த லீடர் வலைத்தளத்தில் பதிவிட்ட விடயம் ஒன்றினை ...
Read More »முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு ஆற்றிலிருந்து மீட்பு!
அமெரிக்காவின் கிராண்ட் ஆற்றில் முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஜேர்மன் நாட்டு கையெறிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேக்னட் பிஷ்சிங் எனப்படும் ஆழமான நீர்நிலைகளில் புதையுண்டு கிடக்கும் பழங்கால பொருட்களை சேகரிக்கும் நபரொருவரின் தேடலின் விளைவாக இந்த ஜேர்மன் நாட்டுத் தயாரிப்பான கையெறிகுண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் கிராண்ட் எனப்படும் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே பிரதேசத்தை சேர்ந்த மேக்னட் பிஷ்சிங்யில் ஈடுபடும் ஜோசப் அலெக்சாண்டர், என்பவரால் குறித்த கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் நேற்றுமுன்தினம் குறித்த ஆற்றில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது நீருக்குள் தொங்கவிடப்பட்டிருந்த ...
Read More »கோத்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட வைகோ கைது!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு வந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடியின் சார்பில் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், கோத்தாபய ராஜபக்ஷவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடியின் சார்பில் அழைப்பு விடுத்தார். இதை ஏற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு இன்று நண்பகல் புறப்படட்டார். இன்று மாலையில் டெல்லி சென்றடையும் அவருக்கு ...
Read More »சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்களின் நிலை?
நாட்டில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டார்கள். அவ்வாறு கூறி ஆட்சிபீடமேறியவர்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையிலா அமைந்திருக்கின்றன? சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்? இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை அவற்றைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் ...
Read More »தாயகத்தில் சிறப்புற நடை பெற்ற மாவீரர் நாள் -2019!
முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லம் கிளிநொச்சி முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 1750 ஈகைச் சுடர்கள் ஏற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாவீரரின் தந்தையான கே.நாகராசா பொதுச்சுடரினை ஏற்றியதை அடுத்து ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது. வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸாரின் ...
Read More »ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்த விசேட சட்டம் அவசியம் – வலியுறுத்திய மஹிந்த தேசப்பிரிய!
தேர்தல் காலப் பகுதியில் ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கான விசேட சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வலியுறுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற சபாநாயகருடன் சந்திப்பின்போதே மஹிந்த தேசப்பிரிய இதனை வலியுறுத்தியுள்ளார். கடந்த 16 ஆம் திகதி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் கால கட்டத்தில் சில ஊடக நிறுவனங்கள் பக்கசார்பாக நடந்து கொண்ட விதத்தினை சுட்டிக்காட்டியே அவர் இதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த ...
Read More »