வொய்ஸ் ரியூப் எனப்படும் யூ ரியூப் அலைவரிசையின், செம்மைப்படுத்துனரான துஷாரா விதானகே சி.ஐ.டி. விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 8.30 மணிக்கு சி.ஐ.டி.யின் கணனிக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவில் ஆஜரான அவரிடம் அங்கு பல மணி நேரம் சிறப்பு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
துஷாரா விதானகேவுக்கு எதிராக சிங்கள அமைப்பொன்று செய்த முறைப்பாட்டை மையப்படுத்தி இந்த விசாரணைகள் இடம்பெற்றதாகவும் அவர் அவரது த லீடர் வலைத்தளத்தில் பதிவிட்ட விடயம் ஒன்றினை மையப்படுத்தி இந்த விசாரணைகள் இடம்பெற்றதாகவும் அறிய முடிகின்றது. நேற்று முன்தினம் நண்பகல் துஷாரா விதானகே விசாரணைகளுக்கு அழைக்கப்பட்ட நிலையில், அன்று அவர் விசாரணைக்கு செல்லவில்லை. நேற்று கலை 8.30 மணிக்கு சி.ஐ.டி.யில் ஆஜராகியிருந்தார். கடந்த அரசாங்கத்தின் நிதி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்பட்ட ‘என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா’, ‘கம்பெரலிய’ ஆகிய திட்டங்களின் பிரசார பொறுப்பாளராக துஷாரா விதானகே செயற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
Eelamurasu Australia Online News Portal