ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தமிழர் தரப்பு அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சரா ஹூல்ரன் கேட்டறிந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனை பிரித்தானியத் தூதுவர் சந்தித்து பேசினார்.
தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தேர்தலின் பின்னரான அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பிலும் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்தும் சுமந்திரன் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal