தாயகத்தில் சிறப்புற நடை பெற்ற மாவீரர் நாள் -2019!

முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லம்

கிளிநொச்சி முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

1750 ஈகைச் சுடர்கள் ஏற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாவீரரின் தந்தையான கே.நாகராசா பொதுச்சுடரினை ஏற்றியதை அடுத்து ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது.

 

 

வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸாரின் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியிலும் தீபம் ஏற்றி – மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று(புதன்கிழமை) மாலை 6.05 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது.

மாவீரர் இருவரின் தந்தையான பொன்னுத்துரை சுப்பிரமணியம் சக்கர நாற்காலியில் வந்து பிரதான பொதுச் சுடர் ஏற்றி வைத்தார்.

வட மராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கு ஒலிபெருக்கி இயக்குவதற்கும் கொடிகள் கட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

 

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்!

கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின அனுஷ்டிப்பு நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.


நான்கு மாவீரர்களின் தந்தையான வைத்தியலிங்கம் சண்முகம் பொதுச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.

 

 

 

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம்

அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவுகூரல் நிகழ்வு இடம்பெற்றது.

இன்று மாலை 6 மணி 5 நிமிடத்தில் ஏரம்பு செல்லம்மா என்ற நான்கு மாவீரர்களின் தாயார் பிரதான ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்.

 

 

 

 

மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

முல்லைத்தீவு மல்லாவி ஆலங்குளத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டது.

இரண்டு மாவீரர்களின் சகோதரரான அருமைத்துரை தவராசாவினால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

 

 

 

 

மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம்

மன்னார் மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

பண்டிவிருச்சான் பிரதான பாதையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு காவல் துறை , இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும், மக்கள் பலரும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்

 

 

 

வன்னிவிளாங் குளம் மாவீரர் துயிலும் இல்லம்

முல்லைத்தீவு, வன்னிவிளாங் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

மூன்று மாவீரர்களின் தாயாரான சுப்பிரமணியம் செல்வராணியால் பிரதான ஈகை சுடர் ஏற்றிவைக்கபட்டது. அதனைத் தொடர்ந்தது ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டன.

 

 

 

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாவீரனின் சகோதரியால் பிரதான ஈகை சுடர் ஏற்றிவைக்கபட்டது.

 

 

 

 

 

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம்!

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்திற்கான நினைவேந்தல் நிகழ்வு மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நினைவேந்தலில் பிரதான ஈகைச்சுடரினை மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்தனர்.