அமெரிக்காவின் கிராண்ட் ஆற்றில் முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஜேர்மன் நாட்டு கையெறிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேக்னட் பிஷ்சிங் எனப்படும் ஆழமான நீர்நிலைகளில் புதையுண்டு கிடக்கும் பழங்கால பொருட்களை சேகரிக்கும் நபரொருவரின் தேடலின் விளைவாக இந்த ஜேர்மன் நாட்டுத் தயாரிப்பான கையெறிகுண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் கிராண்ட் எனப்படும் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதே பிரதேசத்தை சேர்ந்த மேக்னட் பிஷ்சிங்யில் ஈடுபடும் ஜோசப் அலெக்சாண்டர், என்பவரால் குறித்த கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் நேற்றுமுன்தினம் குறித்த ஆற்றில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது நீருக்குள் தொங்கவிடப்பட்டிருந்த அவரது காந்தத்தத்தில் சிக்கிய நிலையில் இந்த இரும்பு குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கையெறி குண்டு ஒரு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு யுத்தகாலத்தில் தாக்குதல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கையெறி குண்டு பொருத்தப்பட்ட இயந்திரம்
Eelamurasu Australia Online News Portal