உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்தை பிடித்தார். உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றிய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (9,720 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 32 வயதான ஜோகோவிச் 5-வது முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் நம்பர் ஒன் இடத்தை 276-வது வாரமாக அலங்கரிக்கிறார். ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து சிறுவர், சிறுமிகள் 4 பேர் பலி!
ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 3 சிறுமிகளும், சிறுவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள ஒரு வீதியில் சாலையோர நடைபாதை மீது சிறுவர், சிறுமிகள் 7 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த சாலையில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று நடைபாதை மீது ஏறி சிறுவர், சிறுமிகள் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 8 முதல் 12 வயதுக்குட்பட்ட ...
Read More »மோட்டார் குண்டுகள் அடங்கிய 13 பெட்டிகள் மீட்பு!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் கொண்ட 13 பெட்டிகளை பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் மீட்டுள்ளனர். குறித்த வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருந்த நிலத்தின் உரிமையாளர் இது தொடர்பில் தகவல் அறிந்து காவல் துறைக்கு வழங்கிய உத்தரவுக்கு அமையவே முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இவை மீட்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்க்கப்பட்ட பல பெட்டிகள் சிதைவடைந்த நிலையில் இருந்ததாகவும், அவை விடுதலை புலிகளினால் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும் இது தொடர்பான விசாரணைகளை முல்லைத்தீவு ...
Read More »தஞ்சமடைய முயற்சிப்பவர்களை ‘ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டோம்!
ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்ட அகதிகள், தற்போது மனுஸ்தீவு மற்றும் நவுருத்தீவில் இருக்கும் அகதிகளை அமெரிக்கா வர வேண்டாம் என எச்சரிப்பதாகக் கூறுகிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன். “இதுகுறித்து என்னால் எதுவும் செய்ய முடியாது,” எனக் கூறும் பீட்டர் டட்டன், பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுகளில் உள்ள அகதிகளை வெளியேற்ற நான் நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது இப்படியான செயல் தன்னை சினங்கொள்ள வைப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் ...
Read More »கூட்டுத் தலைமத்துவம் அல்ல முக்கியம் கொள்கை தான் முக்கியம்!
யதார்த்தத்தை உணரத் தொடங்கியிருக்கின்ற தமிழ் மக்கள் உண்மையான நேர்மையான கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத எங்களது தரப்பிற்கு முழுமையான ஆதரவை வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டுத் தலைமைத்துவம் முக்கியமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். கூட்டுத் தலைமையின் முக்கியத்துவம் குறித்து கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது, என்னைப் பொறுத்தவரையில் கூட்டுத் தலைமத்துவம் முக்கியமான விடயமல்ல. ஏனெனில் இங்கு கூட்டுத் தலைமத்துவம் அல்ல முக்கியம். கொள்கை தான் முக்கியம். நேர்மைத் தன்மை தான் முக்கியம். ...
Read More »சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டவர் ஆஸ்திரேலியாவுக்கு வரத் தடை!
சீனாவில் கரோனா வைரஸ் பரவிய பகுதிகளிருந்து வரும் வெளிநாட்டவருக்கு சுமார் இரண்டு வாரத்திற்கு ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரக்கூடாது என்று அந்நாடு தடை விதித்துள்ளது. இதுகுறித்தான அறிவிப்பை ஆஸ்திரேலியப் பிரதமர் மோரிசன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஸ்காட் மோரிசன் கூறும்போது, “ சீனாவில் கரோனா வைரஸ் பரவிய நகரிலிருந்து வருபவர்கள் இரு வாரங்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த முடிவு மூத்த மருத்துவ ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே எடுக்கப்பட்டது” என்றார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 12 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ...
Read More »நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டி – டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்!
நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி 20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டித் தொடர் சமீபத்தில் தொடங்கியது. இதில் 4-0 என்ற கணக்கில் டி 20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 ...
Read More »கரோனா: அச்சுறுத்தும் புதிய வைரஸ்!
உலக அளவில் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கி வரலாற்றில் இடம்பிடித்த ஆபத்தான வைரஸ் நோய்கள், 2002-ல் சீனாவில் சார்ஸ், 2009-ல் உலகில் பல நாடுகளில் பன்றிக்காய்ச்சல், 2014-ல் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா, 2016-ல் பிரேசிலில் ஜிகா, 2019-ல் சவுதி அரேபியாவில் மெர்ஸ் ஆகியவை. இந்த வரிசையில் 2020-ல் சீனாவில் கரோனா வைரஸ்! உலகில் உயிர் காக்கும் மருத்துவம் பல வழிகளில் முன்னேறிக்கொண்டிருந்தாலும், நாட்டில் மக்கள்தொகை பெருகினால், சுத்தமும் சுகாதாரமும் குறைந்தால், சுற்றுச்சூழல் கெட்டுப்போனால், மக்களுக்கு உணவு விஷயத்தில் அக்கறை இல்லாவிட்டால், தடுப்பூசி உள்ளிட்ட ...
Read More »முகுருசாவை வீழ்த்தி முதல் கிரேண்ட் ஸ்லாம் பட்டத்தை தனதாக்கினார் கெனின்!
மெல்போர்னில் இடம்பெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்ன்ஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் சம்பியன் பட்டத்தை சோபியா கெனின் தட்டிச் சென்றுள்ளார். அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் இன்று இடம்பெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 15 ஆவது இடத்தில் இருக்கும் 21 வயதான அமெரிக்கா வீரங்கனை சோபியா கெனினும் தரவரிசையில் 32 ஆவது இடத்தில் இருக்கும் 26 வயதான ஜேர்மனி வீராங்கனை கர்பீன் முகுருசாவும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடினர். சுமார் 2 மணித்தியாலங்களும் 03 நிமிடங்களும் நீடித்த இந்த ஆட்டத்தின் ...
Read More »தமிழ் தேசிய கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடாக உருவாக்கப்பட்ட மாற்றுத் தலைமை கொள்கை ரீதியான மாற்றுத் தலைமையாக இருக்க வேண்டுமே தவிர சாம்பார் கூட்டணியாக இருக்கக்கூடாது. என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான சிறிகாந்தா விமர்சித்துள்ளார். அத்தோடு தமிழ் தேசிய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று (1)நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்றீடாக புதிய ...
Read More »