யதார்த்தத்தை உணரத் தொடங்கியிருக்கின்ற தமிழ் மக்கள் உண்மையான நேர்மையான கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத எங்களது தரப்பிற்கு முழுமையான ஆதரவை வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டுத் தலைமைத்துவம் முக்கியமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுத் தலைமையின் முக்கியத்துவம் குறித்து கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது,
என்னைப் பொறுத்தவரையில் கூட்டுத் தலைமத்துவம் முக்கியமான விடயமல்ல. ஏனெனில் இங்கு கூட்டுத் தலைமத்துவம் அல்ல முக்கியம். கொள்கை தான் முக்கியம். நேர்மைத் தன்மை தான் முக்கியம். ஊழலில்லாத நேர்மையாக தமிழ் மக்களுடைய நலன்களை மட்டும் மையப்படுத்தி செயற்படக் கூடிய உறுதியான தலைமைத்துவம் தான் முக்கியம். அந்த பண்புகள் தான் முக்கியம். எண்ணிக்கை முக்கியமல்ல. கூட்டுத் தலைமமை என்று சொல்வது வெறும் எண்ணிக்கை தான். வெறும் எண்ணிக்கையைக் காட்டுகிற சொற்பதம் தான் கூட்டுத் தலைமை. கூட்டுத் தலைம முக்கியமல்ல.
இந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எத்தனையோ ஆயுத அமைப்புக்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. ஆனால் ஒரேயொரு ஆயுத அமைப்பு தான் அது விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டும் தான் தமிழ் மக்களுடைய உண்மையான விடுதலையை நோக்கி செயற்பட்டவர்கள்.
மற்றத் தரப்புக்கள் எல்லாம் ஒன்றாக கூட்டாக இருந்தவர்கள். அனால் தமிழ் மக்கள் யாரைத் தெரிவு செய்தவர்கள். நேர்மையாக தங்களுக்காக உயிர்த்தியாகம் செய்த தமிழ் மக்களின் நலன்களை மையப்படுத்தி செயற்படக் கூடிய ஒரேயொரு தரப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தான் இணங்கண்டவர்கள். அங்கு ஒரு கூட்டும் இருக்கவில்லையே ஆனால் மாறி ஆயுதம் ஏந்திய முழு பெயரும் எத்தனையோ இடங்களில் ஒன்றாக இருந்தவர்கள். ஒட்டுக்குழுக்களாக அரசுடன் சேர்ந்தும், அதற்குப் பிறகு தேர்தல் அரசியலிலும் புலிகளை காட்டிக் கொடுத்து தலைமைத்தும் அவர்களிடம் இல்லை தாங்கள் தான் தலைமைத்தவம் என்று செயற்படுவதற்காக கூட்டு சேர்ந்து தான் இருந்தவர்கள். ஆனால் அவர்களின் கொள்கை பிழை என்று தான் அவர்கள் ஒரு நாளும் மக்கள் மட்டத்தில் பெரிய அளவில் செல்வாக்கைச் செலுத்த முடியவில்லை.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் சரியான முடிவிற்கு வருகின்நனர். அந்த முடிவு சரியாக நேர்மையாகச் செயற்படுகிற எங்கள் தரப்பிற்கான ஆதரவாக அமைகிறது. ஆனால் எங்களது தமிழ் தேசிய மக்கள் முண்ணனிக்கு அங்கீகாரம் வரக் கூடாதென்பதற்கான அதைத்குழப்பி திசை திருப்புவதற்காக எங்களுக்கு வரக் கூடிய வாக்கு வங்கிளைச் சிதறடிப்பதற்கதாகத் தான் இப்போது எடுக்கிற அத்தனை முயற்சிகளும் நடக்கிறது
ஏன்பதில் நாங்கள் மிகத் தெளிவு. ஆனாலும் இந்த யதார்த்தத்தை மக்கள் உணர்ந்தும் உள்ளனர். அகவே உண்மையாக நேர்மையாக செயற்படக் கூடிய சரியான தரப்பை மக்கள் தெரிவு செய்வார்கள்.என்றார்.