முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் கொண்ட 13 பெட்டிகளை பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருந்த நிலத்தின் உரிமையாளர் இது தொடர்பில் தகவல் அறிந்து காவல் துறைக்கு வழங்கிய உத்தரவுக்கு அமையவே முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இவை மீட்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்க்கப்பட்ட பல பெட்டிகள் சிதைவடைந்த நிலையில் இருந்ததாகவும், அவை விடுதலை புலிகளினால் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும் இது தொடர்பான விசாரணைகளை முல்லைத்தீவு காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
Eelamurasu Australia Online News Portal