Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட விருப்பம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இரண்டாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இன்று ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More »

புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மறைவு – ஐநா இரங்கல்

தலிபான்கள் தாக்குதலில் பலியான இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மறைவிற்கு ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஸ்பின் போல்டாக் பகுதியை தலிபான்களிடம் இருந்து மீட்பதற்காக அரசு படைகள் கடும் சண்டையை நடத்தி வருகின்றன. இரு தரப்புக்கு இடையிலான இந்த மோதல் குறித்த செய்திகள் மற்றும் படங்களை சேகரிக்கும் பணியில், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக்கி ஈடுபட்டிருந்தார். அப்போது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் சிக்கி ...

Read More »

பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு உயர் பதவி

மரணதண்டனையில் இருந்து மன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. எனினும், கடந்த மாதம் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தேசிய வீட்மைப்பு அதிகாரசபையின் தலைவராக துமிந்த சில்வாவை ஜனாதிபதி நியமித்துள்ளார். இது தொடர்பான கடிதம், ஜனாதிபதியின் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

தனியார் கல்வி முறைமையை முழுமையாக ஸ்தாபிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள்

இலங்கையிலுள்ள இலவச கல்வி முறைமையை இல்லாதொழித்து, தனியார் கல்வி முறைமையை முழுமையாக ஸ்தாபிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த நல்லாட்சி அரசாங்கம் மாலபே சைட்டம் விவகாரத்தில் எம்மிடம் தோல்வியடைந்து ; வீட்டுக்கு சென்றது போலவே, கடந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியதைப் போலவே இந்த அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்புவோம் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே ; தெரிவித்தார். கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட செயற்பாடுகளின்போது ; மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குறித்த சட்ட ...

Read More »

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு ; புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு

கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்ப்பட்டுவரும் நிலையில், இன்றைய தினத்திலிருந்து (வெள்ளிக்கிழமை) அமுலுக்கு வரும்வகையில் அவற்றை மேலும் தளர்த்துவது தொடர்பான அறிவிப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியநிபுணர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட ஒரு தடவையில் 25 வீதமானவர்களுக்கே அனுமதியளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளக இசைநிகழ்ச்சிகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடாத்தவும் புதிய சுகாதார வழிகாட்டியில் ...

Read More »

குணநலன் அடிப்படையில் விசா ரத்து, காலவரையற்ற தடுப்புக்காவல்

ஆஸ்திரேலியாவில் குணநலன் அடிப்படையில் விசா ரத்து செய்யப்படுபவர்கள் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் காலவரையின்றி தடுத்து வைக்கப்படுவதாகவும் இந்த முறையை தடுப்பதற்கான போதிய பாதுகாப்புகள் இல்லை என ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையாளர் Rosalind Croucher எச்சரிக்கை தெரிவித்துள்ளார். புலம்பெயர்வு சட்டத்தின் கீழ் விசா ரத்து செய்யப்பட்டு தடுப்பில் உள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையினை அவர் விடுத்திருக்கிறார். புலம்பெயர்வு சட்ட விதி 501-ன் கீழ் குணநலன் அடிப்படையில் அல்லது குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது தவறான செய்கைகளில் ஈடுபடும் குழுவில் உள்ளவராக ...

Read More »

ஜேர்மனியில் மழை வெள்ளம் காரணமாக 88 பேர் பலி

பேரழிவை ஏற்படுத்தியுள்ள மழை வெள்ளம் காரணமாக ஜேர்மனியில் 88 பேர் பலியாகியுள்ள அதேவேளை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். 81 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் காணாமல்போயுள்ள 1300 பேரை தேடிவருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர். 50 முதல் 60 பேர் காணாமல்போயுள்ளனர் என கருதுகின்றோம் அவர்கள் இதுவரை திரும்பி வரவில்லை என்றால் உயிரிழந்துள்ளனர் என்பதே அர்த்தம் என இன் அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் ...

Read More »

புலனாய்வாளர்களால் ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கு இடையூறு

முல்லைத்தீவு – கோப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்தில் புலனாய்வாளர்களால் ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – கோப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தலிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்கச்செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்காக இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ரியந்த பர்னாந்து தலைமையில், இலங்கை ஆசிரியர் சங்க வடமத்திய மாகாண இணைப்பாளர் ஜே.எம்.மில்லியாஸ், இலங்கை ஆசிரயர் சங்க வவுனியா மாவட்ட தலைவர் பாஸ்கர மூர்த்தி நேசராஜா உள்ளிட்ட குழுவினர் 15.07.2021 கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Read More »

மனித உரிமை மீள் கட்டமைப்பு பொறிமுறை பாெறுப்பை ராஜபக்ஷ ஒருவருக்கே வழங்க வேண்டும்

நல்லிணக்கம் தொடர்பில் மறுசீரமைப்பு நடவடிக்கைக்யாக 4 பொறி முறைகளை அமைப்பதாக கடந்த அரசாங்கம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் தெரிவித்திருந்தது. அதில் இரண்டு விடயங்களை நிறைவேற்றி& ; இருக்கின்றபோதும் உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழு மற்றும் பொறுப்பேற்பதற்கான பொறிமுறை ஆகிய இரண்டு விடயங்களையும் மேற்கொள்வார்கள் என நான் ஒருபோதும் ; நினைக்கமாட்டேன் என கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். கடந்த 30 வருட காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய உயர் நீதிமன்ற நீதியரசர் துலிப் நவாஸ் தலைமையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி ...

Read More »

ஒற்றை டோஸ் தடுப்பூசி நல்ல பலன் தருகிறது- ஆய்வுத்தகவல்

அர்ஜெண்டினா நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 389 சுகாதார பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி  கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரஷியாவில் உருவாக்கப்பட்டது. காய்ச்சல், ஜலதோஷத்தை ஏற்படுத்துகிற 2 அடினோ வைரஸ் கலவையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிற இந்த தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிராக 92 சதவீத செயல்திறனைக் கொண்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் ஏராளமான மக்களுக்கு விரைவாக பாதுகாப்பு அளிப்பதற்கு வசதியாக இரு டோஸ் தடுப்பூசிகளைவிட ஒற்றை டோஸ் தடுப்பூசி பலன் அளிக்குமா என அர்ஜெண்டினா நாட்டில் ...

Read More »