நல்லிணக்கம் தொடர்பில் மறுசீரமைப்பு நடவடிக்கைக்யாக 4 பொறி முறைகளை அமைப்பதாக கடந்த அரசாங்கம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் தெரிவித்திருந்தது.
அதில் இரண்டு விடயங்களை நிறைவேற்றி& ; இருக்கின்றபோதும் உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழு மற்றும் பொறுப்பேற்பதற்கான பொறிமுறை ஆகிய இரண்டு விடயங்களையும் மேற்கொள்வார்கள் என நான் ஒருபோதும் ; நினைக்கமாட்டேன் என கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
கடந்த 30 வருட காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய உயர் நீதிமன்ற நீதியரசர் துலிப் நவாஸ் தலைமையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி விசாரணைக்குழுவுக்கு முன்னால் இன்று சாட்சியமளிப்பதற்காக சமுகசேவை செயற்பாட்டாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அழைக்கப்பட்டிருந்தார்.
அவர் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.