Tag Archives: ஆசிரியர்தெரிவு

தீபாவளியை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுக!

இம்முறை தீபாவளியை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுமாறு பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் நீதியரசருமான க.வி.விக்கினேஸ்வரனும் அறிக்கை மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் நேற்று ‘அன்பான உறவுகளிடம் ஒரு வேண்டுகோள்’ என்ற தலைப்பில் விடுத்த அறிக்கையில் கூறியவை வருமாறு:   ‘இம்முறை தீபாவளியை உங்கள் உங்கள் வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுங்கள். மக்கள் பெருவாரியாகக் கூடுவதை நாங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். வயது முதிர்ந்தவர்கள், சலரோகம், உயர் குருதி அழுத்தம் போன்ற நோய்களுடன் வாழ்பவர்கள், மற்றும் கர்ப்பவதிகளுக்கு ...

Read More »

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுமி பலி

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி இறுகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல் துறை  தெரிவித்துள்ளனர். கோயில் வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த உஜிதன் சாதுரியா (7 வயது) எனும் யாழ். பொஸ்கோ வித்தியாலயத்தில் தரம் 2இல் கற்கும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த மூன்றாம் திகதி இந்தச் சிறுமி ஊஞ்சலாடுவதற்காக மரத்திலிருந்த ஊஞ்சல் கயிற்றை கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார். இதன்போது கயிறு தவறுதலாக ...

Read More »

கணவன் புற்றுநோயால் மரணம், தஞ்சக் கோரிக்கையும் நிராகரிப்பு

இலங்கையிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய குடும்பமொன்றின் பிரதான விண்ணப்பதாரி மரணமடைந்ததையடுத்து அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர். ராஜ் உடவத்த, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ், தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் குடியேறியிருந்தார். எனினும் 2018ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராஜ் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் மரணமடைந்தார். புற்றுநோய் பாதிப்பிற்குள்ளானதால் தொடர்ந்தும் வேலை செய்யமுடியாத நிலைக்குத்தள்ளப்பட்ட ராஜ், வேலை விசாவிற்கான முக்கிய நிபந்தனையை பூர்த்திசெய்ய ...

Read More »

யாழ். நகரில் பிரபல தனியார் ஹொட்டலுக்கு “சீல்” வைப்பு

யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் இன்று பூட்டப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி திருமண விழாக்கள் நடத்துவதாயின் சுகாதாரப் பிரிவினரிடம் முன் அனுமதி பெற்று நடத்த வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் குறித்த ஹோட்டலில் அனுமதி பெறாது சுகாதார நடைமுறையைப் பேணாது பிரமாண்டமாக இன்று திருமண நிகழ்வை நடத்த அனுமதித்ததன் காரணமாக குறித்த ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

கிளிநொச்சியில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி

கிளிநொச்சியில் தற்காலிக வீட்டுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் நிரோஜன் ருஷாந்தன் (8 வயது) என்ற சிறுவன் இன்று உயிரிழந்துள்ளான். தொடர் மழை காரணமாக வெள்ள நீர் தேங்கி குறித்த சுவர் இடிந்து வீழ்ந்ததாகத் தெரியவருகிறது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டமான் நகர் பகுதியிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகல் சிறுவன் உணவருந்திக் கொண்டிருந்த போது அவன் மீது சுவர் விழுந்துள்ளது. பின் அயலவர் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி  காவல் துறையினர்  ...

Read More »

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்ம மரணம்

ஒடிசா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் பாலங்கிர் மாவட்டத்தில் சன்ராபாடா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் புலு ஜானி (50). இவரது மனைவி ஜோதி (48). இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள், இரு மகள்கள் ஆகியோர் இருந்தனர். இவர்கள் அனைவரும் மர்மமான முறையில் உயிரிழந்து அவர்ககள் வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய ஒடிசா மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாட்னாகர் ...

Read More »

சிட்னியில் பாதுகாப்பான புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், பாதுகாப்பான முறையில் புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளன. டிசம்பர் 31ஆம் தேதியன்று, முன்னெப்போதும் இல்லாத வகையில், புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உணவகங்களிலும் ஹோட்டல்களிலும் முன்பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே நகர மையத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். புத்தாண்டுக்கான வாணவேடிக்கை, இந்த ஆண்டு சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும். சிட்னி துறைமுகத்தைச் சுற்றிய பகுதிகளில் வாணவேடிக்கையைக் காண்பதற்கான சிறந்த இடங்கள், சுகாதார ஊழியர்களுக்கும் தீயணைப்பாளர்களுக்கும் ஒதுக்கப்படும்.

Read More »

பஹ்ரைன் பிரதமர் காலமானார்

பஹ்ரைன் பிரதமர் (84 வயது) கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் இன்று காலமானார். உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா நவம்பர் 24, 1935ஆம் ஆண்டு பிறந்தவர். பஹ்ரைன் இளவரசர் மற்றும் அரசியல்வாதியுமான இவர் ஓகஸ்ட் 15, 1971 ஆம் ஆண்டு பஹ்ரைன் சுதந்திரம் பெற்றதிலிருந்து பிரதமராக இருந்து வந்துள்ளார். உலகின் நீண்ட ...

Read More »

யாழில் முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள் விடுவிப்பு

யாழ்.மாவட்டத்தில் இராஜகிராமம், குருநகர் மற்றும் திருநகர் ஆகிய மூன்று கிராமங்களிலும் அமுலில் இருந்த முடக்கல் நிலை இன்று காலையில் இருந்து நீக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அண்மையில் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இராஜகிராமம், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டகுருநகர், திருநகர் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பேலியகொடை மீன் சந்தைக்குச் சென்று வந்ததன் காரணமாக சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தனர். குறித்த தொற்றாளர்கள் அக்கிராமங்களில் நடமாடி இருந்ததால் அக்கிராமங்களிலிருந்து யாரும் வெளியே செல்லாதவாறும், அக்கிராமங்களுக்குள் ...

Read More »

யாழ். மருத்துவ பீடத்தில் இன்று முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடம் மருத்துவ பீடத்தில் இருந்து வேறாக்கப்பட்டு, தனியான பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி. சி. ஆர் பரிசோதனைகள் இன்று முதல் இடம்பெறவுள்ளன. மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ. முருகானந்தன், மு. கலாமதி மற்றும் பேராசிரியர் செ. கண்ணதாசன் ...

Read More »