ஒடிசா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒடிசா மாநிலத்தின் பாலங்கிர் மாவட்டத்தில் சன்ராபாடா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் புலு ஜானி (50). இவரது மனைவி ஜோதி (48). இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள், இரு மகள்கள் ஆகியோர் இருந்தனர். இவர்கள் அனைவரும் மர்மமான முறையில் உயிரிழந்து அவர்ககள் வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய ஒடிசா மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாட்னாகர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் பிரியங்கா ரூத்ரே ‘‘இது தற்கொலையா? கொலையா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
கைப்பற்றப்பட்டுள்ள சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே இது கொலையா? தற்கொலையா? என்பது தெரிய வரும்’’ என்றார். இந்தக் குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளாக சன்ராபாடா கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal