ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், பாதுகாப்பான முறையில் புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
டிசம்பர் 31ஆம் தேதியன்று, முன்னெப்போதும் இல்லாத வகையில், புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உணவகங்களிலும் ஹோட்டல்களிலும் முன்பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே நகர மையத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
புத்தாண்டுக்கான வாணவேடிக்கை, இந்த ஆண்டு சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும்.
சிட்னி துறைமுகத்தைச் சுற்றிய பகுதிகளில் வாணவேடிக்கையைக் காண்பதற்கான சிறந்த இடங்கள், சுகாதார ஊழியர்களுக்கும் தீயணைப்பாளர்களுக்கும் ஒதுக்கப்படும்.
Eelamurasu Australia Online News Portal