யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் இன்று பூட்டப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி திருமண விழாக்கள் நடத்துவதாயின் சுகாதாரப் பிரிவினரிடம் முன் அனுமதி பெற்று நடத்த வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் குறித்த ஹோட்டலில் அனுமதி பெறாது சுகாதார நடைமுறையைப் பேணாது பிரமாண்டமாக இன்று திருமண நிகழ்வை நடத்த அனுமதித்ததன் காரணமாக குறித்த ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Eelamurasu Australia Online News Portal