கிளிநொச்சியில் தற்காலிக வீட்டுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் நிரோஜன் ருஷாந்தன் (8 வயது) என்ற சிறுவன் இன்று உயிரிழந்துள்ளான். தொடர் மழை காரணமாக வெள்ள நீர் தேங்கி குறித்த சுவர் இடிந்து வீழ்ந்ததாகத் தெரியவருகிறது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டமான் நகர் பகுதியிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இன்று நண்பகல் சிறுவன் உணவருந்திக் கொண்டிருந்த போது அவன் மீது சுவர் விழுந்துள்ளது. பின் அயலவர் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal