Tag Archives: ஆசிரியர்தெரிவு

உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும்

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரச உயர்மட்டத்தை வலியுறுத்தும் வகையில், இன்று காலை (02) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாம் கூடி ஆராய்ந்தோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடல் முன்னாள் அமைச்சர் பௌசியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், கொரோனாவல் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிக்க வேண்டும் என்ற சுற்றுநிருபம் வெளிவந்திருக்கும் நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், நேற்று கொரோனாவால் மரணமான ஜுனூஸ் இன் உடலை அடக்கம் செய்வது ...

Read More »

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா, அணு ஆயுத பேச்சுவார்த்தையை நடத்த அமெரிக்கா விரும்பவில்லை என குற்றம் சாட்டி உள்ளது. அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சு வார்த்தையில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தும் நிலையில் தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டுமென வடகொரியா கூறுகிறது. இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை ...

Read More »

மூவர் பூரண குணமடைந்தனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் மூவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்து 21 பேர் இதுவரையில் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

Read More »

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!

கொரோனா வைரசுக்கு எதிராக சிறந்ததோர் மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் சோதனையை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தொடங்கியது. அமெரிக்க அரசுக்கு சொந்தமான பயோமெடிக்கல் மேம்பாட்டு ஆணையத்துடன் (BARDA) இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மூன்று மாத கால ஆராய்ச்சிக்கு பலனாக சிறந்ததொரு கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ஜான்சன் அண்ட் ...

Read More »

விடுதலைக் கோரிக்கையினை நிராகரித்த ஆஸ்திரேலியா

உலகின் பிற பகுதிகளைப் போலவே ஆஸ்திரேலியா எங்கும் பெருகிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களிலும் உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் இடையேயும் பரவியுள்ளது. இந்த நிலையில், தடுப்பில் உள்ள அகதிகளை விடுவிக்குமாறு எழுந்த கோரிக்கையினை ஆஸ்திரேலிய உள்துறை நிராகரித்துள்ளது. முன்னதாக, கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சம் காரணமாக குடிவரவுத் தடுப்பில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களை இங்கிலாந்து அரசு விடுவித்திருந்தது. இதே போல், ஆஸ்திரேலிய அரசும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்கும் என குடிவரவு வழக்கறிஞர்களும் அகதிகளும் எதிர்ப்பார்த்த நிலையில் அக்கோரிக்கையினை ஆஸ்திரேலியா நிராகரித்திருக்கின்றது. ...

Read More »

ஊடகவியலாளர் துசாந்த் மீது கிளிநொச்சியில் வாள்வெட்டு!

இணையத்தள ஊடகவியலாளர் நடராசலிங்கம் துஷாந் மீது கிளிநொச்சி – உதயநகர் அலுவலத்தில் வைத்து நேற்று (30) மாலை 5.30 மணியளவில் நால்வர் கொண்ட குழு தாக்கல் மேற்கொண்டுள்ளது. பொல்லுகள் கொண்டு தாக்கியதுடன், போத்தல் ஒன்றை உடைத்து துஷாந்த் மீது குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது அவர் கைகளில் காயமடைந்துள்ளார். “உதயநகர் பகுதியில் அமைந்துள்ள துஷாந்த் பணியாற்றிய இணைய ஊடகம் ஒன்றின் அலுவலகப்பகுதியில் நபர் ஒருவர் நின்றதாகவும், அவரை அங்கிருந்து வெளியேறப் பணித்த போது, குறித்த நபர் மேலும் சிலரை அழைத்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ...

Read More »

தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்! -நியூயார்க் ஆளுநர்

கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் மக்களுக்கு உதவி செய்ய வரும்படி மருத்துவ தன்னார்வலர்களுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3164 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக நியூயார்க் நகரில் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதுள்ள நிலை நீடித்தால் அடுத்த இரண்டு வாரங்களில் உயிரிழப்பு உச்சத்தை அடையும் என்று அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். எனவே, கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. நியூயார்க் நகரில் ...

Read More »

கொரோனா சந்தேகத்தில் கராப்பிட்டியவில் 200 பேர்

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 200 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் சிகிச்சைப்பெற்று வருகின்றனரென, வைத்தியசாலையின் பணிப்பாளர் சம்பத் ரணவீர தெரிவித்துள்ளார். எனினும்,காலி மாவட்டத்தில் இதுவரை ஒருவர் மாத்திரமே கொரோனா தொற்றுக்கு இலக்காகி  உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

கொரோனா பாதிப்பில் ஆஸ்திரேலியா எப்படி இருக்கிறது?

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வாழும் தமிழ்ப் பெண் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வாழும் தமிழ்ப் பெண் கொரோனா பாதிப்பில் ஆஸ்திரேலியா எப்படி இருக்கிறது… ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வாழும் தமிழ்ப் பெண் | #StayHomeSaveLives #Covid19 #CoronaVirus Posted by Vikatan EMagazine on Monday, March 30, 2020

Read More »

அனைத்து தீர்மானங்களும் அரச உயரதிகாரிகளினாலேயே தீர்மானிக்கப்படும்

அனைத்து காவல் துறை  ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் தீர்மானம் என்பன சிறிலங்கா  அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளினாலேயே தீர்மானிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More »