கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் மக்களுக்கு உதவி செய்ய வரும்படி மருத்துவ தன்னார்வலர்களுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3164 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக நியூயார்க் நகரில் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதுள்ள நிலை நீடித்தால் அடுத்த இரண்டு வாரங்களில் உயிரிழப்பு உச்சத்தை அடையும் என்று அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். எனவே, கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
நியூயார்க் நகரில் உள்ள தற்போதைய நெருக்கடியானது, நாடு முழுவதும் உள்ள பிற சமூகங்கள் விரைவில் எதிர்கொள்ளக்கூடிய நிலைமையின் முன்னோட்டம் என நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவாமோவும், சுகாதார அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.