கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!

கொரோனா வைரசுக்கு எதிராக சிறந்ததோர் மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் சோதனையை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தொடங்கியது. அமெரிக்க அரசுக்கு சொந்தமான பயோமெடிக்கல் மேம்பாட்டு ஆணையத்துடன் (BARDA) இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மூன்று மாத கால ஆராய்ச்சிக்கு பலனாக சிறந்ததொரு கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்து வரும் செப்டம்பர் மாதத்தில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அங்கீகாரம் பெற்று பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என ஜான்சன் அண்ட ஜான்சன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான ஆராய்ச்சியை விரிவுபடுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதே ஆராய்ச்சி முறைதான் எபோல், சிகா வைரஸ், எச்ஐவி மருந்து ஆகியவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.