கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரச உயர்மட்டத்தை வலியுறுத்தும் வகையில், இன்று காலை (02) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாம் கூடி ஆராய்ந்தோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடல் முன்னாள் அமைச்சர் பௌசியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், கொரோனாவல் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிக்க வேண்டும் என்ற சுற்றுநிருபம் வெளிவந்திருக்கும் நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், நேற்று கொரோனாவால் மரணமான ஜுனூஸ் இன் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தை சாதகமான முடிவு வராததாலும் பிரதமருடன் சந்திப்பு மேற்கொள்ளவுள்ளோம் என ரிஷார்ட் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal