கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் செயற்பாட்டைத் தடுக்க, மக்கள் போதிய ஆதரவை வழங்கவில்லை என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மருத்துவர் அழகையா லதாகரன் மேலும் கூறுகையில், “காத்தான்குடியிலுள்ள 18 கிராம சேவகர் பிரிவுகளில் 10 பிரிவுகளை தொடர்ச்சியாகத் தனிமைப்படுத்த வேண்டும் என நாங்கள் பரிந்துரை விடுத்துள்ளோம். இதனடிப்படையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிற்பாடு இந்த 10 கிராமசேவகர் பிரிவுகளில் எவ்வாறு தொடர்ச்சியாக தனிமைப்படுத்தலை அமுல்படுத்திக் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
அமெரிக்க அரசின் உயர் பொறுப்பில் திருநங்கையை நியமித்த ஜோ பைடன்
அமெரிக்க அரசின் சுகாதாரத் துறை துணை செயலாளராக திருநங்கை டாக்டரை ஜோ பைடன் நியமித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு பொருத்தமான தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்து வருகிறார். அந்த வகையில், சுகாதாரத்துறை துணை செயாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை ஜோ பைடன் நியமித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்க அரசுத்துறையின் உயர் பொறுப்பு வகிக்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று பெருமையை பெற்றுள்ளார் டாக்டர் லெவின். நிலையான தலைமை ...
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் – ரிஷப் பண்ட்
பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் என்று ரிஷப் பண்ட் பெருமையுடன் தெரிவித்துள்ளார். பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் 2-வது இன்னிங்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஆட்ட நாயகன் விருதை பெற்ற பிறகு ரிஷப் பண்ட் கூறியதாவது: என் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக இந்த வெற்றி இருக்கும். இந்த டெஸ்ட் தொடர் எனக்குக் கனவுத் ...
Read More »கொவிட்-19: தடுப்பூசி விநியோகத்தில் உலக நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு!
உலக நாடுகளுக்கிடையே கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்துகளை சம அளவில் பகிர்ந்தளிப்பதில் ஏற்றத்தாழ்வு காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உலகில் கொரோனா தடுப்பு மருந்துகளை பெறுவதில் தங்கள் நாட்டுக்கே முன்னுரிமை அளிக்கும் ‘தடுப்பூசி தேசியவாதம்’ முழு வீச்சில் அதிகரித்து வருவதாகவும், தடுப்பூசி என்பது உலகப் பொதுப் பொருளாகக் கருதப்பட வேண்டும் அதனை எந்த நாடும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உலகின் அனைத்துப் ...
Read More »முஸ்லீம் வர்த்தகரின் தடுப்பு மூன்று மாதங்களிற்கு நீடிப்பு
இனஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் முகநூலில் பதிவிட்டார் என்றகுற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட முஸ்லீம் வர்த்தகரை மேலும் மூன்றுமாதகாலத்திற்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதிவழங்கியுள்ளது என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். முகநூலில் இனஒற்றுமையை பாதிக்கும் பௌத்தமதகுருமாரை அவமதிக்கும் பதிவுகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் பசால் முகமட் நிசார் என்ற வர்த்தகரையே மூன்று மாதம் தடுத்துவைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு வழங்கியுள்ளது. ஜனவரி 11ம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார். சந்தேகநபர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ள சிஐடியினர் நாட்டில் ...
Read More »சிறிலங்கா இராணுவ புலனாய்வு பயிற்சிப் பாடசாலை திறப்பு
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கரந்தெனியவிலுள்ள சிறிலங்கா இராணுவ புலனாய்வு காவல் துறை தலைமையகத்தில் புலனாய்வுப் பயிற்சிப் பாடசாலைக் கட்டிடத்தை நேற்று(18) திறந்து வைத்தார். இந்தப் பயிற்சிப் பாடசாலை இராணுவ அலுவலர்களுக்கு மட்டுமன்றி விமானப்படை, கடற்படை, காவல் துறை , இலங்கைச் சுங்கம், சிறைச்சாலைத் திணைக்களம் மற்றும் துறைமுக அதிகார சபை உறுப்பினர்களுக்கும் புலனாய்வுத்துறை கற்கை நெறிகளை வழங்கும். இந்தப் பயிற்சிப் பாடசாலையை வெளிநாட்டுத் துருப்புகளுக்காக எதிர்வரும் ஆண்டுகளில் திறப்பதற்கும் சிறிலங்கா இராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Read More »சீர்குலைந்த அவுஸ்திரேலிய ஓபன் ; 47 வீரர்கள் தனிமைப்படுத்தலில்
அவுஸ்திரேலிய ஒபனில் விளைாயடவுள்ள மொத்தம் 47 வீரர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்களின் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை அவசியம் முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து விக்டோரியாவுக்கு பட்டாய விமானங்களில் சென்ற மூவர் கொரோனா தொற்றுக்குள்ளகியுள்ளமை அடையளாம் காணப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்புகளை பேணி 47 வீரர்களை அவர்களது ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்குளானவர்களுடன் தொடர்பினை பேணிய வீரர்கள் தவிர்ந்த மேலும் பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...
Read More »சிவகரனிடம் விசாரணை! மாவீரர் தின அனுஷ்டிப்பு பற்றி துருவல்
தமிழ் தேசிய வாழ்வுரிமைக் இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மன்னாரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்றைய தினம் வவுனியாவிலிருந்து சென்றிருந்த பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஆண்டு மாவீரர் தினத்தினை நினைவு கூர்ந்தமை தொடர்பில் துருவித்துருவி வினாக்களைத் தொடுத்துள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் சமகால அவருடைய சமகால அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், எதிர்காலத்தில் அவ்விதமான நினைவு கூரும் விடயங்களை தவிர்க்குமாறு பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவுரைகளை வழங்கிச்சென்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »புலம் பெயர்தோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியர்கள் முதலிடம் –ஐ.நா
உலகளவில், புலம் பெயர்ந்து வசிப்போரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது. தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து, வெளிநாடுகளில் வசிப்போர் குறித்து, 2020ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை, ஐ.நா., மக்கள் தொகை விவகாரங்கள் பிரிவு அண்மையில் வெளியிட்டது. இவ் அறிக்கையின் அடிப்படையில் ” இந்தியாவைச் சேர்ந்த, 1.80 கோடி பேர், வெளிநாடுகளில் வசித்துவருவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் தான், இந்தியர்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். அனைத்து கண்டங்கள் மற்றும் பிராந்தியங்களில், வளைகுடா முதல், வட அமெரிக்கா வரையிலும், அவுஸ்திரேலியா முதல், ...
Read More »உயிரை பணயம் வைத்துப் போராடும் தொழிலாளிகளைக் காப்பாற்றுங்கள்
கிளிநொச்சியில் கடந்த ஒருவாரகாலமாக சங்கத்தின் ஜனநாயக பண்புகளைக் காப்பாற்றுமாறு கோரி தென்னை பனம்பொருள் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் சாகும்வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டக் களத்தில் அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கருத்துத் தெரிவிக்கும்போதே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: கடந்த ஆறு நாட்களாக கிளிநொச்சி ...
Read More »
Eelamurasu Australia Online News Portal