இந்தியா, சீனாவைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் மீடூ இயக்கம் பரவி வரும் நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட ‘மீடூ’ ஹேஷ்டேக், சமூக வலைத்தளங்களில் வைரலானது. பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் மோசமான அனுபவங்களை இந்த ஹேஷ்டேக் மூலம் தைரியமாக வெளிப்படுத்தி வருகிறார்கள். அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த இயக்கம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் இருந்த பிரபலங்களின் முகத்திரைகள் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
அவுஸ்திரேலியக் கரையில் செத்து மடிந்த 28 உயிர்கள்!
அஸ்திரேலியாவின் தென்கிழக்குக் கரையில் ஒதுங்கிய 28 திமிங்கிலங்கள், உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இந்தச் சம்பவம் நிபுணர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. வாரயிறுதியில், நியூசிலந்தின் சிறு தீவு ஒன்றில், சுமார் 145 பைலட் வகைத் திமிங்கிலங்கள் உயிரிழந்து கிடந்தன. இதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவிலும் திமிங்கிலங்கள் கரையில் ஒதுங்கியுள்ளன. தனியார் விமானத்தைச் செலுத்திக்கொண்டிருந்த விமானி ஒருவர், குரோஜிங்கோலோங் தேசியப் பூங்காவில் (Croajingolong National Park) ஒதுங்கிய 27 பைலட் வகைத் திமிங்கிலங்கள், ஒரு ஹம்ப்பேக் வகைத் திமிங்கிலம் ஆகியவற்றைக் அவதானித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை விமானி, இந்த திமிங்கிலங்ககை ...
Read More »சுவீடன் நாட்டில் கட்டிடம் மீது மோதிய ஏர் இந்தியா விமானம் – 179 பயணிகள் உயிர் தப்பினர்!
சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கட்டிடத்தில் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக 179 பயணிகள் உயிர் தப்பினர். சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 179 பயணிகள் மற்றும் 6 விமான பணிப்பெண்கள் இருந்தனர். விமானம் 5-வது டெர்மினலில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்காக புறப்பட்டது. பிறகு அந்த விமானத்தை சற்று வேகமாக விமானி இயக்கினார். அப்போது விமானம் சற்று விலகி ...
Read More »ஆஸ்திரேலியாவில் நடுவானில் பறந்த விமானத்தில் அயர்ந்து தூங்கிய விமானி!
ஆஸ்திரேலியாவில் நடுவானில் விமானம் பறந்தபோது விமானி அயர்ந்து தூங்கியதால் விமானம் தரை இறங்காமல் 46 கி.மீ. தூரம் பறந்து சென்றுவிட்டது. ஆஸ்திரேலியாவில் வோர்டெக்ஸ் ஏர் நிறுவனத்தை சேர்ந்த பைப்பர் பிஏ-31 ரக சரக்கு விமானம் டேவான் போர்ட் நகரில் இருந்து கிங் தீவுக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் ஒரு விமானி மட்டுமே இருந்தார். ஆட்டோ பைலட் முறையில் விமானம் இயங்கி கொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானி தன்னையும் அறியாமல் நன்றாக தூங்கி விட்டார். எனவே, விமானம் கிங் தீவில் தரை ...
Read More »கோலி, பிரித்வி ஷா, புஜாரா சிறப்பான ஆட்டம்!
ஆஸ்திரேலிய லெவனுடனான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கோலி, பிரித்வி ஷா, புஜாரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 4 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய லெவனுடன் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது. அதன்படி நேற்று சிட்னியில் ...
Read More »பிரதி சபாநாயகர் தலைமையில் விஷேட விசாரணைக் குழு நியமனம்!
நாடாளுமன்றில் கடந்த 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடந்த முறையற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள பிரதி சபாநயாகர் தலைமையில் குழு நியமனம். நாடாளுமன்றம் இன்ற காலை 10.30 மணியளவில் கூடிய வேளையில் சபாநாயகர் குறித்த விடயத்தை தெரிவித்தார்.
Read More »மஹிந்தவுக்கு எதிராக மற்றுமோர் மனு!
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மற்றொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை தம்பர அமில தேரர் இந்த தாக்கல் செய்துள்ளார். மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 53 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி ...
Read More »அவுஸ்திரேலிய காவல் துறைக்கு உதவியாக இராணுவத்தினர்!
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவசரகால தருணத்தில் மாநில அரசுகள் காவல் துறைக்கு மேலதிகமாக இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தத்திற்கு அமைவாக மாநில காவல் துறை படைக்கு உதவியாக மேலதிகமாக இராணுவத்தின் உதவி தேவை என்று மாநில அரசு கருதுமானால் பாதுகாப்பு அமைச்சு அதனை சாதகமாக பரிசீலிக்கலாம். அதற்கேற்றவாறு இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக Greens கட்சி கருத்து தெரிவிக்கும்போது, ‘எதேச்சாதிகாரத்தை நோக்கி அவுஸ்திரேலியா செல்வதை எடுத்துக்காட்டும் சட்டம்தான் இது’ என்று கண்டித்துள்ளது. இதேவேளை தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின் அடிப்படையில் ...
Read More »மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின் மீது தாக்குதல்!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சுப்பர்மட பகுதியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நேற்றைய தினம் ஒழுங்கமைத்து நடத்தியவரின் வீட்டுக்குள் நள்ளிரவு வேளை புகுந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் , கதவுகளை அடித்து நெருக்கியுள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் சுப்பர்மட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாக இருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு கூடியிருந்த மக்களை கலைந்து செல்லுமாறு தமது துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய ...
Read More »மிருகங்களின் கொழுப்பிலிருந்து விமான எரிபொருள்!
பெட்ரோல் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மிருகங்களின் கொழுப்பில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் பெட்ரோல் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 2 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு காற்றில் கலந்து மாசு ஏற்படுகிறது. விமானங்களில் வேறு வகையான எரிபொருள் பயன்படுத்த தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாட்டின் கெட்டியான கொழுப்பில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிறுவனம் இத்தகைய முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று கோழி கொழுப்பில் இருந்தும் விமானத்துக்கான ...
Read More »