அஸ்திரேலியாவின் தென்கிழக்குக் கரையில் ஒதுங்கிய 28 திமிங்கிலங்கள், உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இந்தச் சம்பவம் நிபுணர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாரயிறுதியில், நியூசிலந்தின் சிறு தீவு ஒன்றில், சுமார் 145 பைலட் வகைத் திமிங்கிலங்கள் உயிரிழந்து கிடந்தன.
இதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவிலும் திமிங்கிலங்கள் கரையில் ஒதுங்கியுள்ளன.
தனியார் விமானத்தைச் செலுத்திக்கொண்டிருந்த விமானி ஒருவர், குரோஜிங்கோலோங் தேசியப் பூங்காவில் (Croajingolong National Park) ஒதுங்கிய 27 பைலட் வகைத் திமிங்கிலங்கள், ஒரு ஹம்ப்பேக் வகைத் திமிங்கிலம் ஆகியவற்றைக் அவதானித்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை விமானி, இந்த திமிங்கிலங்ககை அவதானித்தார். வனத்துறை அதிகாரிகள் பூங்காவிற்குச் சென்றபோது திமிங்கிலங்களில் எட்டு இன்னும் உயிருடன் இருந்தன. ஆனால், அவை மோசமான நிலையில் காணப்பட்டுள்ளன.
அதிகாரிகள் நேற்று மீண்டும் பூங்காவிற்குத் திரும்பியபோது திமிங்கிலங்கள் அனைத்தும் உயிரிழந்துள்ளது. வேறொரு சம்பவத்தில் ஹம்ப்பேக் வகை திமிங்கிலம் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது.
திமிங்கிலத்தின் உடல் பாகங்கள் ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று பூங்கா அறிவித்துள்ளது.