கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பது குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன ஆங்கில இணையத் தளமொன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளானவர்களின் உடல்களை நீண்டகாலம் ஏனையவர்களின் உடல்களுடன் பிரேதஅறையில் வைத்திருக்க முடியாது என்பதாலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இறுதிசடங்குகள் முடிவடையும் வரை கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலனில் வைத்திருப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து இடங்களில் இவ்வாறான குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட தாதியொருவர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மயங்கினார்!
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட தாதியொருவர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மயங்கி விழுந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஃபைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை டென்னிசி பகுதியைச் சேர்ந்த டிஃபனி டோவர் (Tiffany Dover ) என்பவர் முதல் தடுப்பூசியைப் செலுத்திக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் செய்தியாளர்களைச் சந்தித்தார் டிஃபனி, தனக்கு செலுத்தப்பட்ட ஊசி குறித்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தனக்கு உடல் நலம் பாதித்ததாகக் கூறி பாதியில் எழுந்து சென்றார். ஆனாலும் ஓரிரு அடி எடுத்து வைப்பதற்குள் மயங்கிச் சரிந்தார். ...
Read More »அவுஸ்திரேலியாவில் புதிய பரவல் ஆரம்பமானது எப்படி?
நியுஸ்சவுத்வேல்சில் புதிதாக பரவிவரும் கொரோனா வைரசிற்கு காரணமான பிரதான தொற்றாளரை கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக புதிய பரவல் குறித்த உண்மை அறியமுடியாத நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதான தொற்றாளரை அடையாளம் காணமுடியாத நிலை காரணமாக எதனையும் உறுதியாக தெரிவிக்க முடியாத நிலை காணப்படுவதாக நியுசவுத்வேல்சின் பிரதம வைத்திய அதிகாரி கெரி சன்ட் தெரிவித்துள்ளார். பிரதான தொற்றாளரை கண்டுபிடிக்காமல் கொரோனா பரவுவதற்கான வழியை தடுத்துவிட்டோம் என தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். நியுசவுத்வேல்ஸ் இரண்டுவிதமான பரவலை எதிர்கொள்கின்றது ...
Read More »வவுனிக்குளத்திற்குள் வாகனம் விழுந்ததில் இரண்டு வயது சிறுமி உட்பட மூவர் பலி
வாகனம் குளத்திற்கு வீழ்ந்ததன் காரணமாக இரண்டரை வயது சிறுமி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். வவுனிக்குள வீதிவழியாக பயணித்த வாகனம் குளத்திற்குள் விழுந்ததன் காரணமாக இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. வவுனிக்குளம் செல்வபுரம் பகுதியில் வசிக்கும் தந்தை அவரது இரண்டரை வயது மகள் அயல்வீட்டை சேர்ந்த 13 வயது சிறுவன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரின் மகன் நீந்திகரைசேர்ந்துள்ளான் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதின்மூன்று வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தந்தை மகளின் சடலத்தை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
Read More »கொழும்பில் இன்று பரபரப்பாககக் கூடுகின்றது கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறவுள்ளது. புதிய அரசமைப்புக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அதற்கான வேலைத்திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் களமிறங்கியுள்ளது. அதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பிக்க வேண்டிய முன்மொழிவுகள் தொடர்பில் முடிவெடுக்கக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இன்று கொழும்பில் கூடுகின்றது. காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் ...
Read More »அகதிகளை இடமாற்றிய ஆஸ்திரேலிய அரசு
பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவுகளில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 60 அகதிகள் வேறு ஹோட்டலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றம் அகதிகள் நல ஆர்வலர்களின் கடும் எதிர்ப்புக்கும் போராட்டத்துக்கும் மத்தியில் நடந்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இந்த அகதிகள் சுமார் ஓராண்டாக தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்ன் நகரில் உள்ள ஹோட்டலிலேயே சிறைவைக்கப்பட்டிருந்தனர். முன்னதாக, இவர்களை அடையாளம் குறிப்பிடா இடத்திற்கு ...
Read More »மொடர்னா தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல்
ஃபைசரை தொடர்ந்து, மொடர்னா (Moderna) நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கும், அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் ஆலோசனைக் குழு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியால் சில பிரச்சனைகள் ஏற்படும் என்ற புகார் எழுந்தாலும், தடுப்பூசியால் நன்மைகளே அதிகம் என்பதால் ஒப்புதலை அளிப்பதாக, அதற்கான ஆலோசனைக்குழு தெரிவித்துள்ளது. ஒப்புதல் கிடைத்துள்ளதை தொடர்ந்து முதல்கட்டமாக கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படவுள்ளது. மொடர்னாவிடம் இருந்து 10 கோடி தடுப்பூசி டோசுகளை வாங்க, சுமார் 11,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ...
Read More »போலியான குறுஞ்செய்திகளுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம்
அமைச்சகங்களில் வேலை வாய்ப்புகளைத் தருவதாகத் தெரிவித்து அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்களுக்கு ஏமாற வேண்டாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூக வலுவூட்டல், நலன்புரி அமைச்சகம், முதன்மை கைத்தொழில், சமூக நல அமைச்சகம் ஆகியவற்றில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதாகக் கூறி குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. குறித்த தவறான தகவல்களால் நீங்கள் ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களுக்கு தெரி வித்துள்ளது. அமைச்சகம் அத்தகைய தொழில்களை வழங்காததால் அரசாங்கத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பரப்பப்படும் இத்தகைய தவறான பிரசாரங்களுக்கு பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்று செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Read More »மட்டு.,அம்பாறை மாவட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் ஆராய்வு
புதிய அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கமைவாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அடுத்த ஆண்டில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. இவ்விரு மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ள நவீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை ஆராயும் மாநாடு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில் நேற்று(17) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல். பண்டாரநாயக்க, கிழக்கு மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள், மாவட்ட திணைக்களங்களின் பணிப்பாளர்கள், அரச திணைக்களங்களின் ...
Read More »கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவுமா?
மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றளர்கள் எண் ணிக்கை அதிகரித்துள்ளமையால் பொதுமக்கள் நட மாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் நடமாடுவது தொடர் பாக சுய ஒழுக்கம் கொண்டிருக்க வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு செயற்படா விட்டால் கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவக்கூடும் என்று அரச வைத்திய அதி காரிகள் சங்க (GMOA) செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்ஜே தெரிவித்துள்ளார்.
Read More »