ஃபைசரை தொடர்ந்து, மொடர்னா (Moderna) நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கும், அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் ஆலோசனைக் குழு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியால் சில பிரச்சனைகள் ஏற்படும் என்ற புகார் எழுந்தாலும், தடுப்பூசியால் நன்மைகளே அதிகம் என்பதால் ஒப்புதலை அளிப்பதாக, அதற்கான ஆலோசனைக்குழு தெரிவித்துள்ளது.
ஒப்புதல் கிடைத்துள்ளதை தொடர்ந்து முதல்கட்டமாக கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படவுள்ளது. மொடர்னாவிடம் இருந்து 10 கோடி தடுப்பூசி டோசுகளை வாங்க, சுமார் 11,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு செய்து கொண்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal