அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட தாதியொருவர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மயங்கி விழுந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஃபைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை டென்னிசி பகுதியைச் சேர்ந்த டிஃபனி டோவர் (Tiffany Dover ) என்பவர் முதல் தடுப்பூசியைப் செலுத்திக் கொண்டார்.
அடுத்த சில நிமிடங்களில் செய்தியாளர்களைச் சந்தித்தார் டிஃபனி, தனக்கு செலுத்தப்பட்ட ஊசி குறித்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தனக்கு உடல் நலம் பாதித்ததாகக் கூறி பாதியில் எழுந்து சென்றார்.
ஆனாலும் ஓரிரு அடி எடுத்து வைப்பதற்குள் மயங்கிச் சரிந்தார். ஆனால் ஊசியால் ஏற்பட்ட வலியால் அவர் மயங்கியதாகக் கூறப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal