போலியான குறுஞ்செய்திகளுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம்

அமைச்சகங்களில் வேலை வாய்ப்புகளைத் தருவதாகத் தெரிவித்து அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்களுக்கு ஏமாற வேண்டாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சமூக வலுவூட்டல், நலன்புரி அமைச்சகம், முதன்மை கைத்தொழில், சமூக நல அமைச்சகம் ஆகியவற்றில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதாகக் கூறி குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. குறித்த தவறான தகவல்களால் நீங்கள் ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களுக்கு தெரி வித்துள்ளது.

அமைச்சகம் அத்தகைய தொழில்களை வழங்காததால் அரசாங்கத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பரப்பப்படும் இத்தகைய தவறான பிரசாரங்களுக்கு பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்று செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.