தனியார்த் துறையில் பணிபுரிவோருக்கும் 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும், வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்திலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ஆஸ்திரேலியாவிலிருந்து 1500 கி.மீ.க்கு அப்பால் உள்ள தீவுக்கு அனுப்பப்படும் 57 அகதிகள்!
மருத்துவ உதவி தேவைப்படும் 57 அகதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சுவதாக கூறியுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், அவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கு பதிலாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பப்போவதாக கூறியிருக்கிறார். தனது கடுமையான எல்லைக்கட்டுப்பாட்டு கொள்கைகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்களை மனுஸ் மற்றும் நவுருத்தீவுப்பகுதிகளில் தடுத்து வைத்திருக்கின்றது ஆஸ்திரேலிய அரசு. அங்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் கடும் மனநல பாதிப்புக்கு ஆளாவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பல்வேறு மட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தமாக மாறியது. ...
Read More »கொழும்பு விரையும் அவுஸ்ரேலிய போர்க் கப்பல்கள்!
சிறிலங்கா படைகளுடன் பாரிய கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக, 1000 அவுஸ்ரேலியப் படையினரும், நான்கு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களும், அடுத்தவாரம் சிறிலங்கா வரவுள்ளனர். மார்ச் 23ஆம் நாள் தொடக்கம், 29ஆம் நாள் வரை இந்தக் கூட்டு பயிற்சி இடம்பெறவுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய பிரதி தூதுவர் ஜோன் பிலிப் இந்த தகவலை வெளியிட்டார். “இந்தோ-பசுபிக் முயற்சி-2019 என்ற பெயரிலான இந்தக் கூட்டுப் பயிற்சியில் அவுஸ்ரேலியாவின் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் கடற்படையினர் பங்கேற்கின்றனர். அவுஸ்ரேலிய கடற்படையின், கூட்டு செயலணியைச் சேர்ந்த, கன்பெரா, ...
Read More »சிறிலங்கா-அவுஸ்திரேலியா இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம்!
சிறிலங்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஒரு வார காலத்திற்குள் இடம்பெறும் குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதன் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் சிறிலங்கா வரவுள்ளன. கம்பெரா மற்றம் நியூகாசெல் ஆகிய இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மேலும் இரண்டு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வரவுள்ளன. அவுஸ்திரேலியாவின் சுமார் 10 ஆயிரம் முப்படை வீரர்கள் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தில் பங்கு கொள்ளவுள்ளனர். அவர்கள்சிறிலங்காவில் முப்படையினருடன், மனிதநேய சேவைகள், அனர்த்தமுகாமைத் சேவைகள், கடல்வள பாதுகாப்பு, ...
Read More »அவுஸ்திரேலிய அணியினருடன் வோர்னர் ஸ்மித் உணர்ச்சிகர சந்திப்பு!
தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்துவதற்கான முயற்சிக்காக ஒரு வருட தணடனையை அனுபவித்த அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னரும் ஸ்டீவ் ஸ்மித்தும் மீண்டும் அவுஸ்திரேலிய அணியினருடன் இணைந்துகொண்டுள்ளனர் பாக்கிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளிற்காக துபாய் சென்றுள்ள அவுஸ்திரேலிய அணியினரை சந்தித்துள்ள டேவிட் வோர்னரும் ஸ்டீவ் ஸ்மித்தும் அணிவீரர்களுடன் உரையாடியுள்ளனர் டேவிட் வோர்னரும் ஸ்டீவ் ஸ்மித்தும் அணிவீரர்கள் மற்றும் முகாமையாளர்களுடன் கலந்துரையாடினார்கள் பல கேள்விகளிற்கு பதில் அளித்தார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு அற்புதமாகயிருந்தது என தெரிவித்துள்ள வோர்னர் நாங்கள் அணியிலிருந்து விலகயிருந்தோம் என்ற எண்ணமே ...
Read More »அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டை தாக்குதல்!
குவீன்ஸ்லந்தைச் சேர்ந்த செனட்டர் ஃப்ரேஷர் அன்னிங் (Fraser Anning), இளைஞர் ஒருவரைக் குத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கட்டுப்படுத்த நேரிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 49 பேர் மாண்ட நியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்களைப்பற்றி அந்த அவுஸ்திரேலிய செனட்டர் வெளியிட்ட கருத்துகள் உலகளவில் குறைகூறப்பட்டன. அந்தச் சர்ச்சைக்கு மத்தியில், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் செனட்டர் மீது முட்டை ஒன்றை வீசினார். பதிலுக்கு செனட்டர் அவர் முகத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை குத்தியபோது பாதுகாப்பு அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டார். நியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்கள் ...
Read More »வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் 14 பேருக்கு சிவப்பு பிடியாணை!
இலங்கையர்கள் பலருக்கு சர்வதேச பொலிஸின் (இன்டர்போல) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 9 பேர் இலங்கைத் தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 6 ஆயிரத்து 872 பேருக்கு இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்களில் 14 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்களென குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த 14 பேரில் 2 முஸ்லிம்கள் அடங்களாக 11 தமிழ் பேசும் இலங்கையர்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டவர்களுள் 4 பேர் இலங்கை பொலிஸாரினால் தேடப்படுபவர்கள் என்றும் ஏனைய 10 இலங்கையர்களும் வெளிநாடுகளில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படுபவர்கள் என்றும் ...
Read More »வவுனியாவில் வெடிக்காத நிலையில் இரு மோட்டார் குண்டுகள் மீட்பு!
வவுனியா நெடுங்கேணியில் நேற்று மாலை விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற இருவர் வெடிக்காத நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகளை அவதானித்துள்ளனர். இதையடுத்து நெடுங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு அக் குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்கு விஷேட அதிரடிப்படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 4மணியளவில் நெடுங்கேணி ஜயனார் கோவிலுக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதிக்கு இருவர் விறகு வெட்டுவதற்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் மரம் ஒன்றில் இறுகிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகள் வெடிக்காத நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நெடுங்கேணிகாவல் துறைக்கு தகவல் வழங்கப்பட்டு ...
Read More »மசூதியில் துப்பாக்கி சூடு- ஆஸ்திரேலிய நபருக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல்!
நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபரை ஏப்ரல் 5-ம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, கொலை குற்றம்சாட்டப்பட்ட பிரென்டன் டாரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வெள்ளை நிற சட்டை அணிந்து இருந்த அவர், கைவிலங்கு அணிவித்தபடி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிரென்டன் டாரன்ட் ஜாமீன் ...
Read More »நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கி சூடு- 27 பேர் பலியானதாக தகவல்!
நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த ஆசாமி, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர். தாக்குதல் பற்றி காவல்துறைக்கு தகவல் ...
Read More »