குவீன்ஸ்லந்தைச் சேர்ந்த செனட்டர் ஃப்ரேஷர் அன்னிங் (Fraser Anning), இளைஞர் ஒருவரைக் குத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கட்டுப்படுத்த நேரிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
49 பேர் மாண்ட நியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்களைப்பற்றி அந்த அவுஸ்திரேலிய செனட்டர் வெளியிட்ட கருத்துகள் உலகளவில் குறைகூறப்பட்டன.
அந்தச் சர்ச்சைக்கு மத்தியில், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் செனட்டர் மீது முட்டை ஒன்றை வீசினார்.
பதிலுக்கு செனட்டர் அவர் முகத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை குத்தியபோது பாதுகாப்பு அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டார்.
நியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்கள் முஸ்லிம் குடியேறிகள் வந்ததன் விளைவு என்று நேற்று அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.