வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு ஐந்து அழகிப் பட்டங்கள் கறுப்பினப் பெண்கள் வசமாகியுள்ளது. மிஸ் யுஎஸ்ஏ, மிஸ் டீன் யுஎஸ்ஏ, மிஸ் அமெரிக்கா, மிஸ் யுனிவர்ஸ் மற்றும் மிஸ் வேர்ல்ட் என 2019 ஆம் ஆண்டின் அழகிப் பட்டங்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் கறுப்பின அழகிகள். கடந்த சனிக்கிழமை (14.12.2019), லண்டனிலுள்ள கண்காட்சி மையத்தில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் மிஸ் ஜமைக்கா, டோனி ஆன் சிங் 69 ஆவது உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற நான்காவது ஜமைக்கா அழகி ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
அவுஸ்திரேலியாவில் அவசரகால நிலை பிரகடனம்!
அவுஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸில் ஒரு வாரத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் வெப்ப சூழல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து இதன் நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று குறித்த பகுதியில் வெப்பநிலை சராசரியாக அதிகபட்சம் 40.9 சி வரை காணப்பட்டது. ஆனால் இதனைவிட இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 7 நாட்களுக்கு குறித்த ...
Read More »மன்னார் அருட்தந்தை காவல் துறையால் தாக்கப்பட்ட சம்பவம் – மறைமாவட்ட பொது நிலையினர் பேரவை கண்டனம்
மன்னார் மறைசாட்சியர் இராக்கினி திருத்தலப் பகுதியில் அதன் பரிபாலகரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை. அலெக்சாண்டர் சில்வா (பெனோ) அடிகளார் மன்னார் காவல் துறை நிலைய காவல் துறை உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதும், அவமதித்து நடத்த எத்தனித்ததையும் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க சமுகம் வன்மையாக கண்டிக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மறைமாவட்டப் பொது நிலையினர் பேரவையின் பொதுச் செயலாளர் எஸ்.சதீஸ் கண்டன அறிக்கை ஒன்றை இன்று (19) விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், குறித்த பகுதியில் திட்டமிட்ட வகையில் மண் அகழ்வு நடை பெறுவதாகவும், அதனால் ...
Read More »சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் !
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அங்கு மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஆட்சியாளர்களை விமர்சித்தும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பலர் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில், சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர், ‘முதல்வர், துணை முதல்வர் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்’ என மிரட்டல் ...
Read More »நாமல் குமாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
ஊழல் எதிர்ப்பு படையணியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் நாமல் குமாரவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட மேல் மாகாணத்தில் குருணாகல் மாவட்டம், குளியாப்பிட்டி மற்றும் நிக்கவரட்டிய பகுதிகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் கிராமங்களை இலக்குவைத்து திட்டமிட்ட குழுவொன்று முன்னெடுத்த தொடர் தாக்குதல்கள் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »சிறிலங்கா மீண்டும் குடும்ப ஆட்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருகிறது!
சிறிலங்கா மீண்டும் குடும்ப ஆட்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருகிறது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இன்று புதன்கிழமை காலை கிண்ணியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அமைச்சர்களின் பிரத்தியேக உத்தியகத்தர்களாக குடும்ப உறுப்பினர்களை நியமிக்க முடியாது, அமைச்சுக்களின் திணைக்களங்களின் உயர் பதவிகளுக்கு அமைச்சர்கள் தமக்கு நெருங்கியவர்களை நியமிக்க முடியாது என ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் இது ராஜபக்ஷ குடும்பத்துக்கு மட்டும் பொருந்தாது என்பதை அவர் வெளியில் சொல்லவில்லை. ...
Read More »அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாதளவு வெப்ப நிலை உயர்வு!
அவுஸ்திரேலியாவின் சராசரி வெப்ப நிலையானது 40.9 செல்சியஸ் ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியா வரலாற்றிலேயே பதிவான ஆகக் கூடுதலான வெப்ப நிலை இது எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிதுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் வெப்ப நிலையானது 40.3 ஆக பதிவாகியிருந்தது. இந் நிலையிலேயே நேற்றைய தினம் 40.9 என்ற ஆகக்கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் நிலவும் கடும் வறட்சி மற்றும் காட்டுத் தீ ஆகியவையே இந்த வெப்ப நிலை ...
Read More »அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் சாதுரியமாக உயிர் தப்பிய சிறுவன்!
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுதீயில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள 12 வயது சிறுவன் ஒருவர் தனது நாயுடன் அவரது சகோதரனின் ஜீப் வண்டியில் தப்பித்துச்சென்றுள்ளார். இதனால் உயிர் ஆபத்தில் இருந்து சிறுவனும் அவரது நாயும் சுமார் 128 கிலோ மீற்றர் தொலைவில் ,வீதியின் அருகில் இருந்து எவ்வித காயங்களும் இன்றி காவல் துறையினர் மீட்டுள்ளதாக தெரிவித்தனர். சிறுவனிற்கு வாகனம் ஒட்டும் திறன் இருந்ததால் அவர் பாரிய விபத்தில் இருந்து தப்பித்துக்கொண்டதாக சிறுவனை மீட்ட காவல் துறையினர் தெரிவித்தனர். அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உண்டான காட்டுத் ...
Read More »நியூஸிலாந்து காணாமல்போன இருவரை தேடும் பணி இடை நிறுத்தம்!
சீரற்ற காலநிலைக் காரணமாக நியூஸிலாந்தின், வைட் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் சிக்கி காணாமல்போன இருவரை தேடும் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தின்போது குறித்த தீவில் 47 பேர் இருந்துள்ளதுடன், அவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் வைத்தியசாலையில் தீக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் நிலையிலேயே வைட் தீவில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எரிமலை வெடிப்பின்போது காணாமல்போன இருவரை தேடும் நடவடிக்கை ...
Read More »சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டமை புனையப்பட்ட கதையாம்!
“சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் புனையப்பட்டதொரு சம்பவம் என்பது தற்போது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக்கிடம் தெரிவித்தார். இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஜனாதிபதி பெற்றுக்கொண்ட தேர்தல் வெற்றி தொடர்பில் தனதும் தமது அரசாங்கத்தின் சார்பிலும் வாழ்த்துக்களை இதன்போது தெரிவித்த தூதுவர், “நான் அனைத்து ...
Read More »