அவுஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸில் ஒரு வாரத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.
குறித்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் வெப்ப சூழல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து இதன் நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று குறித்த பகுதியில் வெப்பநிலை சராசரியாக அதிகபட்சம் 40.9 சி வரை காணப்பட்டது.
ஆனால் இதனைவிட இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 7 நாட்களுக்கு குறித்த அவசரகால நிலை அமுலில் இருக்கும்.
இதனிடையே நியூ சௌத் வேல்ஸில் சுமார் 100 இடங்களில் பரவிவரும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரி பிரீமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் “அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய அதிகமான வெப்பநிலை ஏற்படும் என்றும் அதனை கணிக்க முடியாது என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் கடுமையான நீண்டகால வறட்சி ஆகியவை நாட்டின் காலநிலைக் கொள்கைகள் குறித்து விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் காலநிலை தொடர்பான சமநிலையை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.