சிறிலங்கா மீண்டும் குடும்ப ஆட்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருகிறது!

சிறிலங்கா  மீண்டும் குடும்ப ஆட்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருகிறது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை காலை கிண்ணியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அமைச்சர்களின் பிரத்தியேக உத்தியகத்தர்களாக குடும்ப உறுப்பினர்களை நியமிக்க முடியாது, அமைச்சுக்களின் திணைக்களங்களின் உயர் பதவிகளுக்கு அமைச்சர்கள் தமக்கு நெருங்கியவர்களை நியமிக்க முடியாது என ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் இது ராஜபக்ஷ குடும்பத்துக்கு மட்டும் பொருந்தாது என்பதை அவர் வெளியில் சொல்லவில்லை.

வெளியிடப்பட்டுள்ள வர்தமானிக்கு அமைய ராஜபக்ஷ சகோதரர்கள் மூவரின் கீழும் 156 அரச திணைக்களங்கள் காணப்படுகின்றன.ஏனைய அனைத்து அமைச்சர்களுக்கும் எஞ்சிய 134 அரச திணைக்களங்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளனசிறிலங்காவில் அதிக சம்பளம் கொடுக்கப்படும் அரச திணைக்களங்களில் ஒன்றான சிறிலங்கா டெலிகொமின் உயர் பதவிக்கு அமைச்சர்’ சமல் ராஜபக்சவின் மகன் நியமிக்கப்படவுள்ளார்.

ஆகவே சிறிலங்கா மீண்டும் குடும்ப ஆட்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதும் ஜனாதிபதியால்  வெளியிடப்படும் அறிவிப்புக்கள் அனைத்தும் எதிர்வரும் பொதுத்தேர்தலை இலக்காக கொண்ட அறிவிப்புக்கள் என்பதையும் இது தெளிவாக காட்டுகிறது.

ஆகவே இவர்கள் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பெற்றால் சிறிலங்காவில் மீண்டும் ஒரு குடும்ப ஆட்சி ஏற்படுவதையும் அந்த ஆட்சியின் கீழ் ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராக நாம் வாய் திறக்க முடியாத காலம் ஒன்றும் உருவாவதையும் யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.