யாழ். பல்கலைக்கழக மருத்துவ அதிகாரியாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் நியமனம் பெறுகின்றார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மருத்துவ அதிகாரி பணிநிலை வெற்றிடமாகவுள்ளது. இந்த வெற்றிடத்துக்கு கோரப்பட்டவிண்ணப்பத்துக்கு சத்தியலிங்கம் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பித்தவர்களில் அவரே தகுதியானவர் எனக் கண்டு நியமனக்கடிதம் வழங்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அவர் கடமையைப் பொறுப்பேற்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவும் சத்தியலிங்கம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைப்பு
ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8-ந் திகதி முதல் 28-ந் திகதி வரை இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு 3 கிராண்ட்சிலாம் போட்டிகள் மட்டுமே நடந்தது. ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் (செர்பியா), சோபியா (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர். தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்ட அமெரிக்க ஓபனில் ...
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்கியது- இந்தியா பேட்டிங்
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக பிங்க் பந்து பயன்படுத்தும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, பகல் ...
Read More »அவுஸ்திரேலியா பிரிஸ்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மரணம்
ஈழத்தில் இருந்து வந்து புகலிடம்கோரிய தமிழ் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியா பிரிஸ்பேர்னில் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார். மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதி மண்டூரைச் சேர்ந்த கிசோபன் ரவிச்சந்திரன் என்ற 25 வயது இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக குயின்ஸ்லாந்து புலம்பெயர் தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா வந்து சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ன் நகரங்களில் வாழ்ந்துவந்த கிசோபன், கடந்த டிசம்பர் 2ம் திகதி பிரிஸ்பேர்னில் வைத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக கிசோபனின் நெருங்கிய நண்பரும் குயின்ஸ்லாந்து புலம்பெயர் தமிழர் அமைப்பைச் சேர்ந்தவருமான தயா ...
Read More »அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் அகதிகளை கொலை செய்கின்றன
மெல்பேர்னில் தமிழ் அகதி தற்கொலை செய்துகொண்டுள்ளமை அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் அகதிகளை கொல்கின்றன என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. வருணிற்கு 18 வயது அவரின் முன்னாள் நீண்டகால முழுமையான வாழ்க்கை காத்திருந்தது, ஆனால் அரசாங்கத்தின் கொள்கைகளே அவர் இனி தான் வாழ்வதில் அர்த்தமில்லை என்ற முடிவிற்கு வரும் நிலையை ஏற்படுத்தின என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. இந்த வருடம் மாத்திரம் 9 தமிழ் அகதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என அறிகின்றோம் என தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் ...
Read More »புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை எளிதில் கொல்லும்
புற ஊதா எல்.இ.டி.க்கள் (ஒளி உமிழும் டயோட்கள்) கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொல்லும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றின் ஒளிவேதியியல் மற்றும் ஒளிஉயிரியல் இதழ் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த ஆய்வின் இணை ஆசிரியரான ஹதாஸ் மமனே கூறுகையில், “கொரோனா வைரஸ் கிருமி நீக்கம் செய்வதற்கு உலகம் முழுவதும் தற்போது பயனுள்ள தீர்வுகளை தேடுகிறது. அந்த வகையில் புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை ஒழிப்பதில் பயனளிக்க வல்லது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். புற ஊதா ஒளியை வெளிப்படுத்தும் ...
Read More »யாழ். ஊர்காவற்றுறையில் காய்கறிக்குத் தட்டுப்பாடு
யாழ். மருதனார்மட காய்கறிச் சந்தையில் கொரோனா தொற்று இனங்காணப் பட்டதையடுத்து ஊர்காவற்றுறை பொதுச்சந்தை மூடப்பட்டுள்ளதால் காய்கறி வகைகளுக்கு அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஊர்காவற்றுறையில் காய்கறி வியாபாரம் செய்வோர் மருதனார் மட சந்தையிலிருந்தே காய்கறிகளைக் கொள்வனவு செய்வதால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரதேச மக்கள், காய்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மீன் சந்தை மட்டுமே இயங்குவதாகவும் காய்கறிக் கொள்வனவுக்காக புளியங்கூடல் போன்ற நீண்ட தூரத்துக்கே செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட வியாபாரிகளுக்கு இன்று பிசிஆர் சோதனை நடத்தப்படவுள்ளதாக பிரதேச வாசி ஒருவர் ...
Read More »யாழில் தொற்றில்லாத நபரையும் கொவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள்!
கொவிட்-19 வைரஸ் தொற்று இல்லாத ஒருவரை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சேர்ரத்த உடுவில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் செயலால் குடும்பஸ்தர் ஒருவர் மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். மருதனார்மடம் பொதுச்சந்தையில் வெற்றிலைக் கடை நடத்தும் குடும்பஸ்தர் ஒருவர், சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்றார். அவரிடமும் மாதிரி பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்குக்கு உட்படுத்தப்பட்டது. இருப் பினும் அதன் பெறுபேறை நேற்று வரை அவருக்குத் தெரியப்படுத்தாத நிலையில் நேற்று அவரது வீட்டுக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் குழுவினர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு உடன் வாருங்கள் எனக் கூறி அழைத்தனர். ...
Read More »ஆஸ்திரேலியா: பல ஆண்டுகளுக்கு பின்பு விடுதலையான குர்து அகதி
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த குர்து அகதியான பர்ஹத் பந்தேஷ் சுமார் ஏழரை ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது 40வது பிறந்தநாளில் விடுவிக்கப்பட்டுள்ளார். மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம், ஆஸ்திரேலியாவில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மந்த்ரா ஹோட்டல், இறுதியாக மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாடும் என ஏழரை ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த பர்ஹத் பந்தேஷ்க்கு ஆஸ்திரேலிய அரசு தற்காலிக இணைப்பு விசா வழங்கி விடுவித்திருக்கிறது. “இதை என்னால் மறக்கவே முடியாது. இந்த விடுதலை எனது பிறந்த நாள் அன்று ...
Read More »அடுத்த 6 மாதங்களுக்கு கொரோனாத் தொற்றின் தாக்கம் மிக மோசமாக இருக்கும்
அடுத்த 4 -6 மாதங்களுக்கு கொரோனாத் தொற்றின் தாக்கம் மிக மோசமாக இருக்கும் என பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் `பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன்`என்ற அறக்கட்டளையின் இணைத்தலைவராகவும் உள்ளார். கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசிகளை உருவாக்கும் பணிக்கு இந்த அறக்கட்டளை நிதிஉதவி அளித்து வருகிறது. இந் நிலையில், பில்கேட்ஸ் அண்மையில் ஊடகமொற்றிற்கு இது குறித்து செவ்வியளித்திருந்தார். குறித்த செவ்வியில் அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கொரோனாத் தொற்றின் தாக்கம், மிக ...
Read More »