யாழ். மருதனார்மட காய்கறிச் சந்தையில் கொரோனா தொற்று இனங்காணப் பட்டதையடுத்து ஊர்காவற்றுறை பொதுச்சந்தை மூடப்பட்டுள்ளதால் காய்கறி வகைகளுக்கு அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறையில் காய்கறி வியாபாரம் செய்வோர் மருதனார் மட சந்தையிலிருந்தே காய்கறிகளைக் கொள்வனவு செய்வதால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரதேச மக்கள், காய்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மீன் சந்தை மட்டுமே இயங்குவதாகவும் காய்கறிக் கொள்வனவுக்காக புளியங்கூடல் போன்ற நீண்ட தூரத்துக்கே செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட வியாபாரிகளுக்கு இன்று பிசிஆர் சோதனை நடத்தப்படவுள்ளதாக பிரதேச வாசி ஒருவர் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal