யாழ். பல்கலைக்கழக மருத்துவ அதிகாரியாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் நியமனம் பெறுகின்றார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மருத்துவ அதிகாரி பணிநிலை வெற்றிடமாகவுள்ளது. இந்த வெற்றிடத்துக்கு கோரப்பட்டவிண்ணப்பத்துக்கு சத்தியலிங்கம் விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பித்தவர்களில் அவரே தகுதியானவர் எனக் கண்டு நியமனக்கடிதம் வழங்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அவர் கடமையைப் பொறுப்பேற்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவும் சத்தியலிங்கம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal