சினிமா விளம்பரங்களில் ஆங்கிலச் சொற்கள் இடம்பெறச் செய்வதை திரைத் துறையினர் தவிர்க்க வேண்டும் என இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளி வர உள்ள ‘அடங்காதே’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத் தில் நடைபெற்றது. நிகழ்ச்சி யில் தங்கர் பச்சான் பேசிய தாவது: சமீப காலமாக நாளிதழ்களிலும், சமூக வலைதளங்களிலும் சினிமா பட விளம்பரங்களைப் பார்க் கிறேன். படத்தின் பெயர் மட்டும் தான் தமிழில் இடம்பெற்றிருக் கிறது. படத்தில் பணிபுரிந்துள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடங்கி மற்ற அனைத்தும் ஆங் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
அமெரிக்காவை காப்பாற்ற மூத்த நிர்வாகிகள் முயற்சி!- நியூயார்க் டைம்ஸ்
டிரம்பின் மோசமான நிர்வாகத்தில் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற மூத்த நிர்வாகிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் மற்றும் வெளியுறவு கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் போன்றவற்றில் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் பல பின் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அமெரிக்காவுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கனவே புகார் கூறி வருகிறார்கள். சொந்த கட்சியிலும் கூட இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான நியூயார் டைம்ஸ் இதழில் இது ...
Read More »மிதிவெடி வெடித்ததில் கணவன் மரணம்! மனைவி தற்கொலை முயற்சி!
மாங்குளம் பிரதேசத்தில் கடந்த தினத்தில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது வெடிப்பொருள் வெடித்ததில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார். மிதிவெடி அகற்றும் சர்வதேச நிறுவனமொன்றின் கீழ் பணிபுரிந்த இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் மனைவி விஷம் அருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கணவரின் திடீர் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
Read More »கடவுள் இருக்கிற இடத்துல இருக்கார்!- ந.முத்துசாமி
ந.முத்துசாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நீர்மை’ நூலே தமிழ்ச் சிறுகதைத் துறையின் சாதனைகளில் ஒன்றுதான். பேச்சுக்கும் பேசாமல் இருப்பதற்கும் இடையில் இருக்கும் மன மூட்டத்தை, தத்தளிப்பை, உளவியல் அவசங்களை நனவு நிலை ஓட்டத்தை வெற்றிகரமாகத் தன் கதைகளில் கைப்பற்றியவர். ‘தமிழின் பாரம்பரிய தியேட்டர்’ என்று தெருக்கூத்து வடிவத்தைச் சொன்னவர். சிறுகதை எழுதுவதை விட்டுவிட்டு, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை நாடகத்துக்காகவும் கூத்து தொடர்பான ஆய்வுகளுக்காகவும் அர்ப்பணித்தார். தெருக்கூத்தை செவ்வியல் நிகழ்த்துக்கலையாக உலக அளவில் நிலைநிறுத்தியவர். ‘கூத்துப்பட்டறை’ அமைப்பின் நிறுவனர். சங்கீத நாடக அகாடமி விருது, பத்மஸ்ரீ ...
Read More »வீடியோ கேம்ஸ் விளையாடுவதை தடுத்த தாய்! தாக்கிய மகன்!
அவுஸ்திரேலியாவில் 14 வயது சிறுவன், வீடியோ கேம் விளையாடுவதைத் தடுத்த தாயை தலையில் பலமாக தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோகன் (14) என்ற சிறுவனுக்கு பிளே ஸ்டேஷன் வீடியோ கேம்ஸ் விளையாடுவதில் ஆர்வமுள்ள நிலையில் இரவு முழுவதும் விளையாடி வந்துள்ளான். கேமின் சுவாரஸ்யத்தாலும், பரபரப்பாலும் உள்ளிழுக்கப்பட்ட லோகன் இந்த கேமிற்கு அடிமையாகவே மாறியுள்ளார். ஒரு கட்டத்தில் கேம்ஸ் விளையாடக்கூடாது என லோகனின் தாய் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகன், அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளார். ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவரது தாய் பொலிசாரை அழைத்ததையடுத்து, ...
Read More »மஹிந்த ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!
கொழும்பு – கடவத்தை பகுதியில் மஹிந்த அணியின் ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையால் குறித்தப் பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டடுகின்றது. கொழும்பில் நடத்தப்படவுள்ள மக்கள் எழுச்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்காக கொடி கட்டிய பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் உட்பட உறுப்பினர் குழுவொன்று இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Read More »பேரணியில் முகமூடி அணிந்த குழுக்கள்! – புலனாய்வு தகவல்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இன்று கொழும்பில் முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிப் பேரணியில் 75000 பேர் வரையில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி இல்லம், அலரி மாளிகை உள்ளிட்டவை ஆர்ப்பாட்டக் காரர்களால் சுற்றிவளைக்கப்படவுள்ளதாகவும், ஆர்ப்பாட்டக் காரர்கள் அவற்றை தமது கட்டுப்பாட்டில் எடுக்கவுள்ளதாகவும் முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் பரிகார பூஜைகளும், தெய்வ பரிகார நடவடிக்கைகளும் அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நாட்டை பிளவுபடுத்துதல், இராணுவத்தினரை வேட்டையாடுதல், மத்தலை ...
Read More »140 கோடி பேரை நோய் தாக்கும் அபாயம்!
உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் சர்வதேச அளவில் 140 கோடி ஆண்களுக்கும், பெண்களுக்கும் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உடற்பயிற்சி செய்வது உடல் நலனுக்கு சிறந்தது. இதன் மூலம் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் உடற்பயிற்சி செய்வது முக்கியம். அதை செய்யாவிட்டால் இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் புற்று நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘தி லான்சைட் குளோபல் ஹெல்த்’ என்ற அறிவியல் நாளிதழில் ...
Read More »ஷாரூக்கான் மகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவியின் இளைய மகள்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ஹிந்தியில் வெளியான தடக் படத்தில் அறிமுகமானார். இஷான் கத்தாருக்கு ஜோடியாக அவர் நடித்த அந்த படம் வெற்றி பெற்றது. இந்நிலையில், அடுத்தபடியாக ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷிகபூரும், பாலிவுட் பட இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் நாயகனாக அறிமுகமாகப்போகிறாராம். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் நிலையில், தற்போது தீவிரமாக கதை கேட்டு வருகிறார் கரண் ஜோஹர்.
Read More »மக்களை பலிகடாவாக்கவே மஹிந்த முனைகிறார்!-நளின் பண்டார
குற்றங்களுக்கான தண்டனைகள் நெருங்குகின்ற நிலையில் அதற்கு அச்சப்பட்டு மக்களை பலிகடாவாக்கவே மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார் என சட்ட ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். மேலும் தேசிய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதாக குறிப்பிட்டு எதிர் தரப்பினர் தலைநகரில் முன்னெடுக்கவுள்ள போராட்டம் அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்பனையும் ஏற்படுத்தாது. எனினும் இப் போராட்டத்தினால் அப்பாவி பொது மக்களே பாதிக்கப்படுவர். மக்களை பலி கொடுத்து ஆட்சியினை கைப்பற்றுவதே கடந்த அரசாங்கத்தின் கொள்கையாக காணப்பட்டது. அதன் தொடர்ச்சியையே தற்போதும் தொடர முயல்கின்றனர். அத்துடன் பொது எதிரணியினர் தம்மை பாதுகாத்துக் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal