சினிமா விளம்பரங்களில் ஆங்கிலச் சொற்கள் இடம்பெறச் செய்வதை திரைத் துறையினர் தவிர்க்க வேண்டும் என இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளி வர உள்ள ‘அடங்காதே’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத் தில் நடைபெற்றது. நிகழ்ச்சி யில் தங்கர் பச்சான் பேசிய தாவது:
சமீப காலமாக நாளிதழ்களிலும், சமூக வலைதளங்களிலும் சினிமா பட விளம்பரங்களைப் பார்க் கிறேன். படத்தின் பெயர் மட்டும் தான் தமிழில் இடம்பெற்றிருக் கிறது. படத்தில் பணிபுரிந்துள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடங்கி மற்ற அனைத்தும் ஆங் கிலத்தில் இடம்பெற்றிருக் கின்றன.
நாளிதழ்களை தமிழர்களாகிய நாம்தானே படிக்கிறோம்? பின்பு எதற்கு ஆங்கிலச் சொற்களோடு விளம்பரத்தை திரைத் துறையினர் இடம்பெறச் செய்கிறீர்கள்? என்ன குணம் இது? அதன் வழியே சமூகத்துக்கு நாம் என்ன சொல்ல வருகிறோம்.
ஒரு சொல் மட்டும் தமிழ்
இந்த மேடையிலேயே பார்க் கிறேன். படத்தின் தலைப்பு ‘அடங்காதே’ என்ற ஒரு சொல் மட்டும்தான் தமிழில் இருக்கிறது. படத்தின் தலைப்பு மட்டும் எதற்கு தமிழில் இடம்பெறச் செய்கிறீர்கள். மக்கள் வர வேண்டும் என்பதற் காகவா?
இதை, இங்கே வேறு யார் சொல்வது. தமிழ் மக்களு டைய பணம் வேண்டும். தமிழர் கள் வேண்டும். மற்றவர் கள் இங்கே வந்து வாழ வேண் டும் என்றெல்லாம் நினைக் கிறோம்.
ஆனால், இந்த மாதிரி வேறு எந்த மொழிகளிலாவது நடக்குமா? நடக்கவில்லை. இதை வேறு எங்கும் செய்யவே முடியாது.
ஒட்டுமொத்த தமிழ்த்திரைத் துறையில் இருப்பவர்களுக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்பு கிறேன். விளம்பரங்களில் ஆங் கிலச் சொற்களைத் தவிர்க்க வேண்டும். இதை இங்கே நான் வேண்டுகோளாக வைக்க வில்லை. அடிப்படை உரிமை யாகவே உரக்கச் சொல்கிறேன். அதேபோல, படத்தில் இடம் பெறும் தமிழ்ப் பாடல்களின் வரிகள் யூ-டியூப்பில் பெரும் பாலும் ஆங்கிலத்திலேயே வரு கிறது.
தமிழில் போட்டால் அவமானமா?
அதைப் பார்க்கவும் கேட் கவும் கொடுமையாக இருக்கிறது. தமிழில் போட்டால் அவமானகர மாக இருக்கிறதா உங்களுக்கு? பிறகு ஏன் அப்படிச் செய்கிறீர்கள்.
இந்தத் தயாரிப்பாளர் மட்டு மல்ல; நேர்மையான படங்களைக் கொடுக்கும் அனைத்துத் தயாரிப் பாளர்களின் படங்களும் வெற்றி பெற வேண்டும்.
இந்த ‘அடங்காதே’ படம் நல்லப் படமாகவே எனக்குப் படுகிறது. அதேபோல, எந்த ஒரு படம் சரியில்லையோ அது இங்கு வெற்றி பெற வேண்டிய அவசியமும் இல்லை.
இவ்வாறு தங்கர் பச்சான் பேசினார்.