முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரான சண்முகம் தவசீலனது வழக்கு விசாரணை இன்று(10.03) முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் ; (30.07) ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து இன்றையதினம் (10.09) மன்றில் ஊடகவியலாளர் மற்றும் குறித்த முறைப்பாடு செய்த கடற்படை சிப்பாய் ஆகியோரை ; ஆஜராகுமாறும் அத்தோடு பொலிசாரை மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் ஏற்கனவே நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
சீனாவுக்கு அடுத்து அதிக உயிரிழப்பை சந்தித்த இத்தாலி!
சீனாவுக்கு அடுத்து இத்தாலியில் கொரோனா வைரசுக்கு அதிக மக்கள் பலியாகி உள்ளனர். மருத்துவமனையில் மொத்தம் 7375 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. சீனாவில் இதுவரை 3119 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 80700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர். சீனாவுக்கு வெளியே கொரோனா ...
Read More »நிரம்பி வழிந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்!
இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணி விளையாடிய டி20 உலக கோப்பை இறுதி போட்டியை மெல்போர்ன் மைதானத்தில் 86,174 பேர் பார்வையிட்டது சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணி மோதிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. பொதுவாக ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிதான் மெல்போர்ன் மைதானத்தில் நடத்தப்படும். டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் முதல் நாளில் ரசிகர்களால் மைதானம் நிரம்பி வழியும். மைதானத்தின் முழு இருக்கைகளான 86,1764-ம் நிரம்பிவிடும். அதேபோல் ...
Read More »தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்கள் சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரிக்கை
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பொது மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்கும் பொறுப்பு கூறலை நிலைநாட்டுவதற்கும் தமது சொத்துக்கள் விபரங்களை பொது வெளியில் வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தாம் ஊழலுக்கு எதிரான அர்ப்பணிப்புள்ளவர் என்பதையும் மிக வெளிப்படைத் தன்மை , பொறுப்புக் கூறுபவர் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை பொது ...
Read More »இராணுவ கெடுபிடிகள் அதிகரிக்கும்!
வருங்காலத்தில் இராணுவ கெடுபிடிகள் அதிகரிக்கும் என தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் நேற்று பிற்பகல் வடமராட்சி, கரணவாய் மேற்கு அந்திரான் குடியிருப்பு மக்களுடன் இடம் பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வட கிழக்கு மக்களிடையே அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றங்களை சமாந்திரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எமது குறிக்கோள். அரசியலிலே எமது தன்னாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். வட கிழக்கு இணைவு மற்றும் தமிழர் தாயகத்தில் தன்னாட்சியானது சமஸ்டி ...
Read More »வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!
முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில்(08) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றது . இறுதிப்போரின் காலப்பகுதியில் 2009 ஆம் ஆண்டு இராணுவத்திடம் தமது பிள்ளைகளை ;கையளித்து ,சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு செல்வபுரம் மில்லடி பகுதியில் ஆரம்பமான இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு நிறைவடைந்தது ஐக்கியநாடுகள் சபையின் 43ஆவது மனிதஉரிமைகள் கூட்ட தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் தருணத்தில் ...
Read More »புற்றுநோய் பாதித்த 7 வயது இந்தியச் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய துபாய் இளவரசர்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 7 வயது இந்தியச் சிறுவனின் நெடுநாள் ஆசையை துபாய் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் நிறைவேற்றி வைத்துள்ளார். இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபத்தை சேர்ந்த முஹம்மது தஜாமுல் ஹுசைன் என்பவர் துபாயில் தொழில் செய்தவாறு தனது மனைவி, பிள்ளைகளுடன் அங்கேயே வாழ்ந்து வருகிறார். இவரது 7 வயது மகன் அப்துல்லாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கழுத்தில் தோன்றிய ஒரு கட்டி, நாளுக்குநாள் வேகமாக வளர்ந்து பெரிதாகிக் கொண்டே போனது. மருத்துவர்கள் நடத்திய ’பயாப்சி’ பரிசோதனையில் அது புற்றுக்கட்டி ...
Read More »யாழில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!
தாயொருவர், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பிரசவித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. கட்டுவன் மேற்கு பகுதியைச் சேர்ந்த 30 வயதான கிருஷ்ண பவன் கீர்த்திகா என்ற பெண்ணே தனது முதலாவது பிரசவத்தின்போது, இவ்வாறு 4 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். குழந்தை பிரசவத்திற்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த மூன்றாம் திகதி ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். பிறந்த நான்கு குழந்தைகளும் வைத்தியர்களின் விசேட பராமரிப்பில்(இன்கியூபேட்டர்) பராமரிக்கப்பட்டு வருவதாகவும், ...
Read More »வடக்கு, கிழக்கில் கடுமையான பாதுகாப்பு!
கடந்த வியாழக்கிழமை முதல் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள பிரபல அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் என்கிறக் குற்றச்சாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் அறுவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, வடக்கு, கிழக்கில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும் இணைந்து வடக்கில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, வீடொன்றிலிருந்து நவீன தொடர்பாடற் கருவிகளும், சக்தி வாய்ந்த வெடிப்பொருள்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மன் நாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருந்த ...
Read More »அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைவே!
ஒட்டு மொத்தத்தை கணக்கிடும் போது அமெரிக்க மக்கள் ‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது குறைவே என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான ‘கொரோனா’ வைரஸ் உலகம் முழுவதையும் தாக்கி உள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் 17 பேர் ‘கொரோனா’வில் பலியாகி உள்ளனர். 299 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் ‘கொரோனா’ பாதிப்பு குறைவே என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, “ஒட்டு மொத்தத்தை கணக்கிடும் போது அமெரிக்க மக்கள் ‘கொரோனா’ வைரசால் ...
Read More »