முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில்(08) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றது .
இறுதிப்போரின் காலப்பகுதியில் 2009 ஆம் ஆண்டு இராணுவத்திடம் தமது பிள்ளைகளை ;கையளித்து ,சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு செல்வபுரம் மில்லடி பகுதியில் ஆரம்பமான இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு நிறைவடைந்தது
ஐக்கியநாடுகள் சபையின் 43ஆவது மனிதஉரிமைகள் கூட்ட தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் தருணத்தில் அங்கு சென்றுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஜெனீவாவில் கையளிக்கப்படவுள்ள மகஜர் முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் வாசிக்கப்பட்டது
இப்போராட்டத்தில் பங்குத்தந்தையர்கள்,அருட்சகோதரிகள், அரசியல் வாதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமுகமட்டபிரதிநிதிகள்,இளைஞர் யுவதிகள்,பொதுமக்கள் என 500க்கு மேற்பட்டோர் கலந்து கவனயீர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்தினர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் “உலகெல்லாம் பெண்கள்உரிமை பேசும் இந்நாளில் தெருவில் கிடந்து அழ வைத்திருக்கிறது இந்த அரசு, எமது பிள்ளைகள் நீங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது ஒப்படைத்தோம்,கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும்,
ஐ.நாவின் 43ஆவது கூட்டத்தொடரைவிட்டு விலகின்னால் நீதி மறுக்கப்படுமா?, கோத்தா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே? இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு மரணச்சான்றிதழ்தான் பதில் என்றால் கொலையாளி யார் ? போன்ற வாசகங்களை தமிழ், ஆங்கிலம்,சிங்கள மொழியிலான பதாதைகளை கையில் ஏந்தி கண்ணீருடன் கவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த போராட்டத்துக்கு வலுசேர்க்கும் முகமாக முல்லைத்தீல் அனைத்து வர்த்தக நிலையங்களும் பூரண கதவடைப்பை மேற்கொண்டு ஆத்தாவை வழங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது .