இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணி விளையாடிய டி20 உலக கோப்பை இறுதி போட்டியை மெல்போர்ன் மைதானத்தில் 86,174 பேர் பார்வையிட்டது சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணி மோதிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. பொதுவாக ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிதான் மெல்போர்ன் மைதானத்தில் நடத்தப்படும். டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் முதல் நாளில் ரசிகர்களால் மைதானம் நிரம்பி வழியும்.
மைதானத்தின் முழு இருக்கைகளான 86,1764-ம் நிரம்பிவிடும். அதேபோல் இன்று மைதானம் நிரம்பி இருந்தது. ஆஸ்திரேலியாவில் இதற்குமுன் பெண்கள் மோதும் எந்தவொரு போட்டிக்கும் இதுபோன்று ரசிர்கள் கூடியது கிடையாது. தற்போதுதான் இவ்வாறு கூடியுள்ளது. இதன்மூலம் இந்த போட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.