தாயொருவர், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பிரசவித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கட்டுவன் மேற்கு பகுதியைச் சேர்ந்த 30 வயதான கிருஷ்ண பவன் கீர்த்திகா என்ற பெண்ணே தனது முதலாவது பிரசவத்தின்போது, இவ்வாறு 4 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
குழந்தை பிரசவத்திற்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த மூன்றாம் திகதி ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.
பிறந்த நான்கு குழந்தைகளும் வைத்தியர்களின் விசேட பராமரிப்பில்(இன்கியூபேட்டர்) பராமரிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தைகளும் தாயும் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்
Eelamurasu Australia Online News Portal